General24 June 2026

டிட்வா சூறாவளித்தாக்கம் - வீடுகளை இழந்த 1,300 க்கும் மேற்பட்டோர் இன்னும் பாதுகாப்பு முகாம்களில்!

டிட்வா சூறாவளி தாக்கத்தின் காரணமாக வீடுகளை இழந்து இடம்பெயர்ந்த 1,336 பேர் இன்னும் நாட்டின் பல பகுதிகளில் உள்ள தற்காலிகப் பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசாங்கத்தின் அண்மைக்காலத் தரவுகளின்படி, கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 18 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேர் இரண்டு வெவ்வேறு பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளனர்.

அத்தோடு, கேகாலை மாவட்டத்தில் 43 குடும்பங்களைச் சேர்ந்த 133 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 35 குடும்பங்களைச் சேர்ந்த 140 பேரும் தற்போதும் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் வீடுகளைச் சீரமைப்பதற்கான முழுமையான மற்றும் விரைவான இழப்பீட்டுத் தொகையை அரசாங்கம் தங்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes