General24 June 2026

கிராம உத்தியோகத்தர்கள் இன்று முதல் தொழில்சார் நடவடிக்கை

கிராம உத்தியோகத்தர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு இன்று (24) முதல் தமது கடமைகளை மட்டுப்படுத்தும் தொழில்சார் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

அதன்படி, திங்கட்கிழமைகளில் பிரதேச செயலகங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது

மாதாந்தப் பிரிவு நாள் கூட்டங்களைத் தவிர, பிரதேச செயலகங்களால் அழைக்கப்படும் ஏனைய அனைத்துக் கூட்டங்களையும் பகிஷ்கரிப்பது.

அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் ஏனைய அனைத்து வேலைத்திட்டங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்காதிருப்பது.

போன்ற விடயங்களை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes