General24 June 2026

கனிம அகழ்வுக்கு அள்ளி வழங்கப்படும் ஆராய்ச்சி உரிமங்கள்

இலங்கை வரலாற்றில் இதுவரை பெரியளவிலான கனிம அகழ்வு உரிமங்கள் வழங்கப்படவில்லை எனவும், அவ்வாறு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு உரிமங்களும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற கனிம வளங்கள் மற்றும் புதிய தேசிய கனிமக் கொள்கை 2026 தொடர்பான விவாதத்தின் போதே அவர் இந்த விபரங்களை வெளியிட்டார்.

இது குறித்து நாடாளுமன்றத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"அரசாங்கம் தற்போது 'ஆராய்ச்சி உரிமம்' என்ற பெயரிலேயே பல தனியார் நிறுவனங்களுக்கு அனுமதிகளை அள்ளி வழங்கியுள்ளது. இலங்கையில் கனிமங்கள் இருக்கின்றனவா என்று தேடிப் பார்ப்பதற்கான இந்த எளிய அனுமதியை வைத்துக் கொண்டு, சில தனியார் நிறுவனங்கள்அவுஸ்திரேலியா போன்ற வெளிநாட்டுப் பங்குச் சந்தைகளில் தங்களைப் பட்டியலிட்டு, எமது நாட்டின் வளங்களைக் காட்டி கோடிக்கணக்கான ரூபாய்களை ஈட்டுகின்றன. ஆனால், இதனால் இலங்கை அரசாங்கத்திற்கு கிடைக்கும் ராயல்டி வருமானம் பூச்சியமாகும் நிலை ஏற்படுகின்றது.

"மட்டக்களப்பு, அம்பாறையின் திருக்கோவில், அக்கரைப்பற்று, திருகோணமலையின் குச்சவெளி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களின் பகுதிகளும் இந்த கனிம மற்றும் இல்மனைட் அகழ்வுகளால் முற்றாகச் சிதைக்கப்படவுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes