கால்பந்து உலகக் கிண்ணத் தொடரின் 'B' குழுவுக்கான லீக் போட்டியில் கட்டார் அணியை 3 - 1 என்ற கோல் கணக்கில் போஸ்னியா-ஹெர்சகோவினா அணி தோற்கடித்துள்ளது.
இந்த போட்டியின் முதல் பாதியில் போஸ்னியா-ஹெர்சகோவினா அணி 2 கோல்களையும், கட்டார் அணி ஒரு கோலையும் பெற்றிருந்தன.
ஆட்டத்தின் 29ஆவது நிமிடத்தில் ஐ. பாசிக்கின் (I. Bašić) உதவியுடன் போஸ்னியா அணியின் கே. அலஜ்பெகோவிக் (K. Alajbegović) முதல் கோலை அடித்தார்.
தொடர்ந்து 34ஆவது நிமிடத்தில் கட்டார் அணியின் மஹ்மூத் அபுநாடா (Mahmud Abunada) சொந்த கோல் (Own Goal) அடித்ததன் மூலம் போஸ்னியா அணிக்கு இரண்டாவது கோல் கிடைத்தது.
அதன்பின்னர் ஆட்டத்தின் 42ஆவது நிமிடத்தில் எட்மில்சன் ஜூனியரின் (Edmílson Junior) உதவியுடன் கட்டார் அணியின் ஹசன் அல் ஹைதோஸ் (Hassan Al Haydos) ஒரு கோலை அடித்தார். இதன்படி முதற்பாதி ஆட்டம் 2 - 1 என முடிவடைந்தது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தின் 80ஆவது நிமிடத்தில், டி. ஹாட்ஸிகாடுனிக்கின் (D. Hadžikadunić) உதவியுடன் போஸ்னியா அணியின் ஈ. மஹ்மிக் (E. Mahmić) மூன்றாவது கோலை அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
அதன்படி, ஆட்டநேர முடிவில் போஸ்னியா-ஹெர்சகோவினா அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, நடப்பு உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் ஆறாவது அணியாக கட்டார் மாறியுள்ளது.
இதேவேளை, இந்த வெற்றியின் மூலம் 4 புள்ளிகளைப் பெற்றுள்ள போஸ்னியா-ஹெர்சகோவினா அணி அடுத்த சுற்றுக்கு (இரண்டாம் சுற்று) முன்னேறுவதற்கான அதிக வாய்ப்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News
பிள்ளையானுடன் இருக்கும் படங்கள் குறித்து கோட்டாபயவின் சட்டத்தரணி நீதிமன்றில் விளக்கம்!
Local
25 June 2026
‘ட்ரில்லியனர்’ அந்தஸ்தை இழந்தார் ஈலோன் மஸ்க்!
Local
25 June 2026
போஸ்னியா-ஹெர்சகோவினா வெற்றி - தொடரிலிருந்து கட்டார் வெளியேற்றம்
Local
25 June 2026
கனடாவை வீழ்த்தி சுவிட்சர்லாந்து வெற்றி!
Local
25 June 2026
பாடசாலை உணவகங்களுக்காக சுகாதார அமைச்சினால் விசேட ஆரோக்கிய உணவுப் பட்டியல் வெளியீடு!
Local
25 June 2026
“நெல் கொள்முதல் விலை உயர்த்தினால் அரிசி விலையை ஆலை உரிமையாளர்கள் அதிகரிப்பர்”
Local
25 June 2026
நிலைமை தீவிரம்: டெங்கு நோயாளர்களால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்!
Local
25 June 2026
மூத்த சகோதரியாக மாறிய மனைவி - தமிழ் கற்ற சந்தேகநபர் - கைதானவர்கள் நுவரெலியாவுக்கு!
Local
25 June 2026
சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் மற்றும் வவுனியா மாநகர சபை முதல்வர் பதவி நீக்கம்
Local
24 June 2026
கப்பல்களிடம் கட்டண அறவிடவில்லையென ஈரான் உறுதி; தகவல் பொய்யாயின் பேச்சுவார்த்தை முறியும் - டொனால்ட் ட்ரம்ப்
Local
24 June 2026