எதிர்ப்பாளர்களை எதிரிகளாகப் பார்க்கும் ஒரு அரசியல் சட்டகத்திற்குள்தான் அடுத்த அரசியல் சக்திக்குத் தயாராக வேண்டியுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று யாராவது அரசாங்கத்திற்கு எதிராகப் பேசினால் அவர் ஊழல்வாதி அல்லது திருடன் எனவும், நெல்லுக்கு நல்ல விலை கேட்டு வீதியில் இறங்கும் விவசாயிகள் குடிகாரர்களாகவும், தங்களின் தொழில்முறை கௌரவத்தைப் பாதுகாக்க முன்வரும் மருத்துவர்கள், சட்டத்தரணிகள் திருடர்களாகவும் சித்திரிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் காலத்தில் அளவில்லாத பொய்களைக் கூறி, பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் நெல்லுக்கு 150 ரூபா கொள்வனவு விலை போன்ற எதிர்பார்ப்புகளை வழங்கி விவசாய மக்களை ஏமாற்றிய அரசாங்கம், தற்போது உரம் மற்றும் உரிய விலையை வழங்காது, நெல் அறுவடை காலத்தில் வெளிநாட்டுப் பழங்கள் மற்றும் காய்கறிகளை இறக்குமதி செய்கிறது என்றும், எரிபொருள் நிவாரணம் இல்லாததால் கடற்றொழில் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோல், கேகாலை பகுதியில் இளைஞர்கள் மீது காவல்துறையினரால் திட்டமிட்டு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், சட்டத்தை வளைக்கும் அதிகாரிகள் தங்களின் இறுதி நிலையைப் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் என எச்சரித்துள்ளார்.
மேலும், புத்தளம் மாவட்டத்தில் பௌத்த மற்றும் கத்தோலிக்க மக்களிடையே பிளவை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகவும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விபரங்கள் அடங்கிய புலனாய்வு அறிக்கைகளை மூடி மறைத்தவர்களுக்குப் பதவியுயர்வுகளும், தீவிரவாதிகளுக்காகக் குரல் கொடுத்தவர்களுக்கு அரசாங்கப் பதவிகளும் வழங்கப்படும் அதேவேளை, தகவல்களை வழங்கிய சிவில் குடிமகன் சிறைக்கு அனுப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 'பௌத்த மக்கள் நாகதீபத்திற்கு வரத் தேவையில்லை, அனுராதபுரத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்' என ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் குறிப்பிட்ட கூற்றானது, அவர் எந்தளவுக்குக் கீழ்மட்ட நிலைக்கு வீழ்ந்துள்ளார் என்பதைக் காட்டுவதாகவும், துன்பங்கள் தாளாது மக்கள் வீதிக்கு வரும்போது அவர்களை ஒடுக்குவதற்கே அரசாங்கம் முற்படுகிறது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பலத்த விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
Latest News
'கெஹெல்பத்தர பத்மே' இன் முக்கிய துப்பாக்கிதாரி 'மாட்டியா' நள்ளிரவில் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார்!
Local
26 June 2026
ரோஹித் சர்மாவுக்கு வழங்கப்பட்ட இந்தியாவின் உயரிய விருது!
Local
26 June 2026
ஸ்மார்ட்போன் பயன்படுத்தத் தடை - ஆப்கானிஸ்தானில் அதிரடி உத்தரவு- மீறினால் உடைத்து நொறுக்கப்படும்!
Local
26 June 2026
2025 சாதாரண தரப் பரீட்சை மறுபரிசீலனை - விண்ணப்பங்கள் தொடர்பில் பெற்றோர்கள், மாணவர்களின் கவனத்திற்கு!
Local
26 June 2026
சுகாதாரத் துறையில் பாரிய நியமனங்கள் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் விசேட அறிவிப்பு!
Local
26 June 2026
22 ஆண்டுகால நல்லவர் வேடம் கலைந்தது - கின்னஸ் புத்தகத்தில் WWE ஜாம்பவான் ஜோன் சீனா!
Local
26 June 2026
எதிர்ப்பாளர்களை எதிரிகளாகப் பார்க்கும் அரசாங்கம் - நாமல் ராஜபக்ஷ முழக்கம்!
Local
26 June 2026
வெள்ளைக் கடற்கரையில் சிக்கிய 6 மர்ம மூடைகள்
Local
25 June 2026
மட்டக்களப்பில் பராமரிக்கப்படாத காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றினூடாக கடுமையான சட்ட நடவடிக்கை: மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் எச்சரிக்கை! மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி, பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பினை உறுதிசெய்யும் நோக்குடன், பராமரிக்கப்படாத வெற்றுக்காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தினூடாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் ஆலோசனையின் பேரிலும், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் தொழில்நுட்ப வழிகாட்டலின் கீழும் இந்த விசேட சுகாதாரத் திட்டங்கள் தற்பொழுது மாநகர சபை எல்லைக்குள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மாநகர சபை எல்லைக்குள் தற்பொழுது எதிர்கொள்ளும் பிரதான சவால்களில் ஒன்றாகப் பராமரிக்கப்படாத வெற்றுக்காணிகள் காணப்படுகின்றன. இக்காணிகளின் உரிமையாளர்கள் அவற்றை முறையாகப் பராமரிக்காததன் காரணமாக, அயலவர்கள் மற்றும் பாதசாரிகள் இக்காணிகளுக்குள் பிளாஸ்டிக் கழிவுகளையும் ஏனைய குப்பைகளையும் கொட்டுவதனை ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கும் பொதுச் சுகாதார சீர்கேட்டிற்கும் வழிவகுக்கின்றன. துப்புரவு செய்யப்படாமல் அடையாளம் காணப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் கண்டறியப்பட்டு, அவற்றை உடனடியாகத் தூய்மைப்படுத்துமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றது. மாநகர சபையின் இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறும் மற்றும் அலட்சியம் காட்டும் காணி உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தினூடாகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அத்துடன், அடையாளம் காணப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் எவரும் முன்வராத பட்சத்திலோ அல்லது காணிகளைப் பராமரிக்க இணங்காத பட்சத்திலோ, அவை "மாநகர சபைக்குச் சொந்தமானது" என்ற அறிவித்தல் பலகைகள் அக்காணிகளில் நடப்பட்டு, அவை மாநகர சபையின் நேரடிப் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்படும் என்றும் முதல்வர் எச்சரித்தார். பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் இவ்வேலைத்திட்டத்திற்குத் தத்தமது காணிகளைத் தூய்மையாகப் பேணி, அனைத்துக் குடிமக்களும் மாநகர சபைக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் மேலும் தெரிவித்தார்.
Local
25 June 2026
2.5 மில்லியன் டொலர் கொள்ளை: பொறுப்பில் இருந்து நழுவுகிறதா மத்திய வங்கி? நாடாளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் கேள்வி!
Local
25 June 2026