நாட்டில் 49000 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (26) உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறித்து கவலை வெளியிட்டார்.
தற்போதைய நிலவரப்படி நாட்டில் 49,000 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 25,000 பேர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த விடயத்தில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
அரசாங்கம் சமர்ப்பித்துள்ள நிதி ஸ்திரத்தன்மை தொடர்பான அறிக்கை குறித்து தமக்கு முரண்பட்ட கருத்துகள் உள்ளதாக அவர் தெரிவித்தார். வரிச்சுமைகளை மக்கள் மீது சுமத்தி, நலன்புரிச் செலவுகள் மற்றும் மூலதனச் செலவுகளைக் குறைத்தே இந்த நிதி இலக்குகள் எட்டப்பட்டுள்ளதாக அவர் விமர்சித்தார்.
சமர்ப்பிக்கப்பட்ட நிதி அறிக்கை தொடர்பில் விரிவான நாடாளுமன்ற விவாதம் ஒன்று அவசியமென அவர் கோரிக்கை விடுத்தார்.
மேலும், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்துவது தொடர்பிலும், நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் குறித்தும் அவர் தனது கருத்துகளை முன்வைத்தார்.
Latest News
லொகு பெட்டி' ஜூலை 10 வரை விளக்கமறியலில்
Local
26 June 2026
2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை - திருத்தப்பட்ட கால அட்டவணை வெளியீடு
Local
26 June 2026
இலங்கை சுங்கத்தின் அசத்தல் சாதனை - அரசின் வருவாய்க்கு வலுவான பங்களிப்பு
Local
26 June 2026
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சந்திப்பு
Local
26 June 2026
நாடாளுமன்ற ஒம்புட்ஸ்மன் நியமனத்தில் தாமதம் ஏன்? - அரசாங்கத்திடம் எதிர்க்கட்சி கேள்வி
Local
26 June 2026
அமைச்சர்கள் எங்கே? - நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் விசனம்
Local
26 June 2026
மின்சார செலவைக் குறைக்க புதிய முயற்சி - துறைமுகத்தை வந்தடைந்த 7 மின்கல அமைப்புகள்
Local
26 June 2026
மூடப்படும் அபாயத்தில் சூரியசக்தி நிறுவனங்கள்! அரசாங்கத்தின் மந்தமான போக்கை சாடிய தயாசிறி ஜெயசேகர
Local
26 June 2026
சூரியசக்தி நிறுவனங்களின் நிலுவைத் தொகைகள்: ஒரு மாத கால அவகாசம் வழங்கிய வலுசக்தி அமைச்சர்!
Local
26 June 2026
உயர் நீதிமன்ற நீதியரசர் வெற்றிடங்களை நிரப்ப வலியுறுத்தல் – எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையொப்ப சேகரிப்பு
Local
26 June 2026