General26 June 2026

சூரியசக்தி நிறுவனங்களின் நிலுவைத் தொகைகள்: ஒரு மாத கால அவகாசம் வழங்கிய வலுசக்தி அமைச்சர்!

சூரியசக்தி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை அரசாங்கம் எப்போது செலுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று வாய் மூலக்கேள்வி நேரத்திலேயே அவர் இந்த கேள்வியை முன்வைத்துள்ளார்.

சூரியசக்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தும் சுமார் 459 நிறுவனங்களுக்கு கடந்த சில மாதங்களாக பணம் வழங்கப்படாமையால், அவை பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளன. இதனால் ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலளித்த வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க,

நிலுவைத் தொகைகளைச் செலுத்தத் தேவையான 15 பில்லியன் ரூபா நிதி திறைசேரியிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ளது. அமைச்சரவையின் வழிகாட்டலின்படி, நிலுவையில் உள்ள அனைத்துக் கொடுப்பனவுகளையும் அடுத்த ஒரு மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் உறுதியளித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes