ஹஜ் யாத்திரியர்கள் எதிர்கொண்ட சிரமங்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஹஜ் யாத்திரியர்கள் எந்தவிதமான பிழைகளும் குறைகளும் ஏற்படவில்லை என்றும், ஹஜ் குழு அறிக்கை திருப்திகரமாக இருப்பதாகவும் அமைச்சர் தனது பதிலில் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், மினா மற்றும் முஸ்தலிபா பகுதிகளில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான ஹஜ் பயணிகள், அடிப்படை வசதிகள் இன்றி கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுத்திகரிப்பு நிலையங்கள், உணவு மற்றும் தேநீர் விநியோகத்திற்காக பயணிகள் நீண்ட வரிசைகளில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவியது.
பாதிக்கப்பட்ட பயணிகள், தங்களின் அவல நிலையை சமூக ஊடகங்கள் வாயிலாக நேரலையாகப் பகிர்ந்துள்ளனர்.
வானூர்தி நிலையங்களில் இருந்தபோதும் யாத்திரியர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டதாகவும், இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு காணொளிகள் மற்றும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது.
ஹஜ் குழுவின் அறிக்கையை மட்டும் நம்பாமல், இந்த விடயத்தின் உண்மைத்தன்மையை கண்டறிய ஹஜ் குழுவிற்கு வெளியே உள்ள உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சுயாதீனமான விசாரணைக் குழுவை நியமிக்க வேண்டும் . அரசாங்கம் இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Latest News
போதைப்பொருள் கடத்தல் ‘காட்ஃபாதர்’களின் தற்போதைய தலைமுறை நாமல் ராஜபக்ச - பிரதி அமைச்சர் மஹிந்த
Local
26 June 2026
ஹஜ் யாத்திரியர்கள் அவதி குறித்த குற்றச்சாட்டு: சுயாதீன விசாரணைக் குழு அமைக்க கோரிக்கை
Local
26 June 2026
நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்! சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தல்
Local
26 June 2026
ஹஜ் யாத்திரை ஏற்பாடுகளில் குறைபாடுகள் இல்லை: அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி உறுதி
Local
26 June 2026
சிலரை இலக்கு வைக்கின்றனர் - அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து நாமல் விமர்சனம்
Local
26 June 2026
நாளை முதல் மூன்று நாட்களுக்கு கூரை மீது பொருத்தப்பட்டுள்ள 300 அலகுகளுக்கு மேற்பட்ட சூரிய சக்தி மின் தொகுப்புகளை செயலிழக்கச் செய்யுமாறு அறிவுறுத்தல்
Local
26 June 2026
பொசன் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள்
Local
26 June 2026
போதைப்பொருளுக்கு இனி இடமில்லை - அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Local
26 June 2026
வவுனியாவில் 21 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது: வாகனங்களும் மீட்பு
Local
26 June 2026
தெல்தெனிய பெண் மரணம் - சந்தேகநபர் உட்பட நால்வருக்கு விளக்கமறியல்
Local
26 June 2026