இரத்தினபுரி: சபரகமுவ மாகாணத்தில் இந்த ஆண்டில் இதுவரை 4,660 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளதாக சபரகமுவ மாகாண பிரதம செயலாளர் ஜே. எம். யூ. கே. ஜயசேகர தெரிவித்துள்ளார்.
சபரகமுவ மாகாண டெங்கு ஒழிப்புக்குழுக் கூட்டம் இன்று (26) இரத்தினபுரியில் உள்ள மாகாண சபை கேட்போர் கூடத்தில், மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலேயே இந்தத் தரவுகள் வெளியிடப்பட்டன.
மாகாணத்தில் டெங்கு நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், எதிர்வரும் ஜூலை மாதம் 01 ஆம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை 'டெங்கு ஒழிப்பு வாரமாக' பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் அரச மற்றும் தனியார் துறையினர் அனைவரும் ஒன்றிணைந்து முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டுமென மாகாண பிரதம செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நிகழ்வில் கருத்துத் தெரிவித்த சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, "டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் வெறும் ஒரு வாரத்துடன் நின்றுவிடக் கூடாது. வருடம் முழுவதும் இந்தச் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கு உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்கள், சுகாதாரப் பிரிவினர் மற்றும் காவல்துறை உள்ளிட்ட அனைத்து அரச மற்றும் தனியார் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்படுவது அவசியமாகும்" என்று வலியுறுத்தினார்.
மேலும், இந்த டெங்கு ஒழிப்புத் திட்டங்களை வினைத்திறனாக முன்னெடுப்பதற்கு 'பிரஜா சக்தி' குழுக்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளுமாறு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் திட்டமிடல் வைத்திய அதிகாரி காமினி இதன்போது பரிந்துரைத்தார்.
இந்தநிகழ்வில் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
Latest News
கேப் வேர்ட் மற்றும் சவூதி அரேபியா அணிகள் 0-0 என்ற கோல் சமனிலை
Local
27 June 2026
ஹோர்முஸ் நீரிணையில் வணிக கப்பல் மீது ஈரானின் ஆளில்லா வானூர்தி தாக்குதலுக்கு ட்ரம்ப் கண்டனம்
Local
27 June 2026
வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 920 ஆக அதிகரிப்பு
Local
27 June 2026
தியத்தலாவயில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்து : 42 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி!
Local
27 June 2026
ஈராக்கை படுதோல்வியடைய செய்த செனகல்
Local
27 June 2026
கால்பந்தாட்டத்தில் 'ஹெட்ரிக் சாதனை புரிந்த பிரான்ஸ் வீரர்
Local
27 June 2026
ஹோர்முஸில் இருந்து கப்பல்களை வெளியேற்றும் பணிகளில் தடங்கல்கள்
Local
27 June 2026
வெனிசூலா நிலநடுக்கங்கள்: உத்தியோகபூர்வ உயிரிழப்புக்கள்-920. 49ஆயிரம் பேரை காணவில்லை
Local
27 June 2026
தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் அதிரடி மாற்றம்!
Local
27 June 2026
உலகளாவிய எண்ணெய் விலை சரிவால் எரிபொருள் விலையில் நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளது: அரசு
Local
27 June 2026