General26 June 2026

தங்கத்தின் விலையில் அதிகரிப்பு

நாட்டில் தங்கத்தின் விலை இரண்டாவது தடவையாக இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக
அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி , இன்று காலை (26) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 379,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று மாலை 2000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 381,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,625 ரூபாயாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,812 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes