General27 June 2026

வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 920 ஆக அதிகரிப்பு

வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 920 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் 3,360க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்நது நடைபெற்று வருகிறது.

முன்னதாக வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை 7.2 மற்றும் 7.5 ஆகிய மெக்னிடியூட் அளவுகளில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes