ஸ்கண்டிநேவியா முதல் ஆல்ப்ஸ் மலைத்தொடர் வரை ஐரோப்பாவின் பல பகுதிகளில் வெப்பநிலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
இது ஒரு "சுகாதார நெருக்கடி" என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இது ஒரு "சுகாதார நெருக்கடி" என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
ஜெர்மனியில் கிழக்கு மாநிலமான சாக்சனி-அன்ஹால்ட்டில் வெப்பநிலை 41.5° செல்சியஸ் ஆக பதிவாகி புதிய சாதனை படைத்துள்ளது.
டென்மார்க்கின் ஆர்கஸ் நகருக்கு வடக்கே 37° செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இது 1874-ஆம் ஆண்டிற்குப் பிறகு அந்த நாட்டில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாகும்.
செக் குடியரசின் பிராக் நகருக்கு வடக்கே 40.8 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் ஜூன் மாதத்திற்கான புதிய வெப்பநிலை சாதனையாக பதிவாகியுள்ளது.
பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் கடும் வெப்பத்தால் பலர் உயிரிழந்துள்ளனர்.
ஜெர்மனியில் நெடுஞ்சாலைகளில் தார் உருகி சாலைகள் பிளவுபட்டன.
தொடருந்துப் பாதைகள் வீக்கமடைந்ததால், தொடருந்து நிறுவனங்கள் பயணங்களை ரத்து செய்கின்றன அல்லது குறைக்கின்றன.
தொடருந்துப் பாதைகள் வீக்கமடைந்ததால், தொடருந்து நிறுவனங்கள் பயணங்களை ரத்து செய்கின்றன அல்லது குறைக்கின்றன.
இத்தாலியில் ரோம், மிலன், வெனிஸ் உள்ளிட்ட 18 நகரங்களுக்கு சுகாதார அமைச்சகம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மற்றும் மிக முக்கியமான நதியான 'போ' நதியின் நீர்மட்டம் குறைந்து, கடல்நீர் உட்புகுந்ததால் விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.
வானிலை நிபுணர்கள் இந்த வெப்ப அலைக்கு 'ஒமேகா பிளாக்' எனப்படும் வானிலை நிகழ்வே காரணம் என்று கூறுகின்றனர். இது ஒரு பகுதியில் சூடான காற்றை நீண்ட காலத்திற்குத் தேக்கி வைத்து வெப்பத்தை அதிகரிக்கிறது.
மனித நடவடிக்கைகளால் ஏற்படும் காலநிலை மாற்றமே இந்த தீவிர வெப்பத்திற்கு முக்கிய காரணம் என்றும், இரவு நேரங்களில் வெப்பம் அதிகரிப்பது இருபது ஆண்டுகளுக்கு முன்பை விட தற்போது 100 மடங்கு அதிகம் நிகழும் வாய்ப்பு உள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது இந்த வெப்ப அலை படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் இன்று ஞாயிற்றுக்கிழமை பல பகுதிகளில் கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையங்கள் எச்சரித்துள்ளன.
Latest News
கானாவுடனான போட்டியில் குரோஷியாவுக்கு வெற்றி: வெளியேறியது ஸ்கொட்லாந்து
Local
28 June 2026
பனாமாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி!
Local
28 June 2026
ஐரோப்பாவில் கடும் வெப்ப அலை: சாதனைகளை முறியடிக்கும் வெப்பநிலை
Local
28 June 2026
மீண்டும் துடுப்பெடுத்தாடும் இலங்கை: இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்குமா?
Local
28 June 2026
வெனிசுவேலாவில் இடிபாடுகளுக்குள் 32 மணிநேரம் சிக்கியிருந்த 18 நாள் குழந்தை மீட்பு!
Local
28 June 2026
லெபனானுடன் உடன்படிக்கை: இஸ்ரேலிய அமைச்சரவைக்குள் கடும் அதிருப்தி
Local
28 June 2026
2027 ஆம் ஆண்டில் 6ஆம் தரத்துக்கு புதிய கல்வி மறுசீரமைப்பு: கல்வி அமைச்சு முழுத்தயார்
Local
28 June 2026
அதிவேக மற்றும் கவனக்குறைவான சாரதிக்கு எதிராக உடனடி அபராதம் இல்லை; நேரடியாக சட்ட நடவடிக்கை!
Local
28 June 2026
தியத்தலாவயிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் பேருந்து விபத்து!
Local
28 June 2026
3 வாரங்களாகத் தொடரும் உணவு தவிர்ப்பு: இருதய நோய் பிரிவில் சிகிச்சை; ஜனாதிபதியே உயிருக்கு பொறுப்பு என சலே கடிதம்!
Local
28 June 2026