International28 June 2026

தங்கம், வெள்ளி விலை அதிகரிப்பு : புதிய விலை நிலவரம்!

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (28) அதிகரிப்பை பதிவு செய்துள்ளன.

அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,071.95 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதுடன், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 58.92 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை அதிகரிப்பு காரணமாக இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக சந்தை தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

இதனுடன், அமெரிக்க டொலரின் வலுவூட்டல், சர்வதேச பொருளாதார நிலைமைகள் மற்றும் உலக அரசியல் நகர்வுகள் ஆகியனவும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்விற்கு முக்கிய காரணிகளாக அமைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்நாட்டு தங்க விலைகளில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து நகை விற்பனையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes