General28 June 2026

கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் போதைப்பொருள் பறிமுதல்; பெண் உட்பட ஐவர் கைது

7 கோடியே 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹஷீஷ் மற்றும் குஷ் போதைப்பொருள்களை கடத்திய குற்றச்சாட்டில் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் உட்பட ஐந்து சந்தேகநபர்களும் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட உள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 6 கிலோகிராம் ஹஷீஷ் மற்றும் 11 கிலோகிராம் குஷ் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் கேகாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என வானூர்தி நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes