யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் நிகழ்த்தப்பட்ட கொடூரங்களுக்கு நீதி கோரி, ‘உரிமைப்பந்தம்’ என்ற தொனிப்பொருளில் அமைதி வழி மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று மாலை உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் செம்மணிச் சந்தியில் அமைந்துள்ள அணையா விளக்குத் திடலில் இன்று மாலை 4.30க்கு இந்த நிகழ்வு ஆரம்பமானது.
கடந்த வருடம் இதே நாளில் செம்மணியில் முன்னெடுக்கப்பட்ட 'அணையா விளக்கு' போராட்டத்தின் தொடர்ச்சியாக, நீதிக்கான குரலை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த மக்கள் எழுச்சி இன்று நடத்தப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் எனப் பலதரப்பட்ட மக்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றுத் தங்களின் நீதிக்கான கோரிக்கையை முன்வைத்தனர்.
நீண்டகாலமாக நீதிக்காகக் காத்திருக்கும் மக்கள், குறிப்பாக முன்வைக்கப்பட்டுள்ள ஆறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்தக் கோரியும் இந்த அமைதி வழிப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
செம்மணி மண்ணில் இடம்பெற்ற கொடூரங்களுக்கு உரிய நீதி கிடைக்கும் வரை போராட்டங்கள் ஓயாது என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த மக்கள் எழுச்சி அமைந்திருந்தது.

Latest News
15 ஆண்டுகளுக்குப் பின்னர் சீனாவில் இலங்கையர்கள் சாதனை: சர்வதேச சமையல் போட்டியில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்!
Local
28 June 2026
நாகப்பட்டினம் துறைமுகத்தில் வரியில்லா சில்லறை விற்பனை நிலையங்கள்!
Local
28 June 2026
செம்மணி கொடூரங்களுக்கு நீதி கோரி 'உரிமைப்பந்தம்'மக்கள் எழுச்சி!
Local
28 June 2026
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்குரிமை: அரசாங்கம் தீவிர பரிசீலனை
Local
28 June 2026
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் பென் ஸ்டோக்ஸ்!
Local
28 June 2026
பஹ்ரைன் மற்றும் குவைத் மீதான தாக்குதல்களுக்கு லெபனான் ஜனாதிபதி கண்டனம்
Local
28 June 2026
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் போதைப்பொருள் பறிமுதல்; பெண் உட்பட ஐவர் கைது
Local
28 June 2026
யூடியூப் (YouTube) காணொளிகளைப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயன்றதால் ஏற்பட்ட உயிரிழப்பு
Local
28 June 2026
பிரான்சில் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழப்பு!
Local
28 June 2026
கொழும்பு மாநகர சபை விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு
Local
28 June 2026