General29 June 2026

பதுளையில் வித்தியாசமான தானசாலை: முச்சக்கர வண்டிகளுக்கு இலவச கிரீஸ் சேவை

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு, பதுளை பகுதியில் மிகவும் வித்தியாசமான மற்றும் பயனுள்ள தானசாலை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வழமையாக உணவு மற்றும் பானங்கள் வழங்கப்படும் தானசாலைக்கு மத்தியில், இங்கு முச்சக்கர வண்டிகளுக்கு இலவசமாக கிரீஸ் பூசும் சேவை முன்னெடுக்கப்பட்டது.

பதுளை பகுதியில் உள்ள வாகன பொறியியல் நிறுவனம் ஒன்றினால் இந்த தானசாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

"முச்சக்கர வண்டிகளுக்கு மகிழ்ச்சியைத் தரும் கிரீஸ் தானசாலை" என்று பெயரிடப்பட்ட இந்த முயற்சி, அந்த பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதனையடுத்து, தானசாலையியின் சேவையைப் பெறுவதற்காக முச்சக்கர வண்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்ததைக் காண முடிந்தது.

இவ்வாறான சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய தானசாலைகள் சாரதிகளுக்குப் பெரும் உதவியாக அமைந்ததாகப் பயனாளிகள் தெரிவித்தனர்.
Related recommendation
Hiru TV News | Programmes