General29 June 2026

காங்கேசன்துறை முதல் பொத்துவில் வரையிலான கடற்பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

காங்கேசன்துறை முதல் மன்னார், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்துக்கு சுமார் 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே, கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படையினர் குறித்த எச்சரிக்கை தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் 50 மில்லி மீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

அதேநேரம், ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன், மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவு பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes