லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்க மகளிர் அணியை 40 ஓட்டங்களால் வீழ்த்தி இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது.
இங்கிலாந்து அணி சார்பாக அதிகப்படியாக, ஆலிஸ் கேப்சி (Alice Capsey ) 47 பந்துகளுக்கு 75 ஓட்டங்களையும், ஹீதர் நைட் (Heather Knight ) 47 பந்துகளுக்கு 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்தும் 170 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்டங்களை மாத்திரமே பெற்று போட்டியில் தோல்வியடைந்தது.
தென்னாப்பிரிக்க அணி சார்பில், டாஸ்மின் பிரிட்ஸ் (Tazmin Brits ) 45 பந்துகளுக்கு 51 ஓட்டங்களையும், அணித் தலைவர் லாரா வோல்வார்ட் (Laura Wolvaardt) 15 பந்துகளுக்கு 17 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
அதன்படி குறித்த போட்டியில், 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணி தென்னாப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிப் பெற்றது.
Latest News
2027 நிதியாண்டுக்கான பாதீடு மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்
Local
03 July 2026
இலங்கையில் இன்று தங்கவிலை 4,000 ரூபாயால் அதிகரிப்பு
Local
03 July 2026
70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான 'அஸ்வெசும' கொடுப்பனவு இன்று வங்கி கணக்குகளில் வைப்பு
Local
03 July 2026
உலகின் மிக அழகான தீவாக இலங்கை: சர்வதேச பிக் 7 ட்ராவல் பட்டியலில் முதலிடம்!
Local
03 July 2026
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது
Local
03 July 2026
அல்ஜீரியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 16 அணிகளுக்கான சுற்றுக்கு முன்னேறியது சுவிட்சர்லாந்து!
Local
03 July 2026
யோஷித ராஜபக்ச தாக்கல் செய்த மறு சீராய்வு மனு தள்ளுபடி
Local
03 July 2026
தென்னாப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி இங்கிலாந்து மகளிர் அணி அபார வெற்றி
Local
03 July 2026
வெனிசுவேலா நிலநடுக்கம்: 8 நாட்களாக இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர் உயிருடன் மீட்பு!
Local
03 July 2026
18 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான அஞ்சலோட்டப் போட்டியில் வலல்ல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி முதலிடம்
Local
03 July 2026