வெனிசுவேலாவில் கடந்த ஜூன் 24ஆம் திகதி ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, 8 நாட்களாக இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
ஹெர்னான் கில் என்ற பாதுகாப்பு ஊழியரே மீட்கப்பட்டுள்ளார்.
நிலநடுக்கத்தின் போது அவர் மாடி வாகன நிறுத்துமிடத்தின் அடித்தளத்தில் இருந்த சிறிய கொங்கிரீட் சாவடிக்குள் இருந்துள்ளார்.
மீட்புக்குழுவினர் அவரை அடையாளம் கண்டு, 100 மணித்தியாலங்களுக்கும் மேலான கடுமையான போராட்டத்திற்குப் பின்னரே பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர்.
சிலி நாட்டு தீயணைப்பு வீரர் ஒருவர், இது தனது வாழ்நாளில் எதிர்கொண்ட "மிகவும் சிக்கலான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக கடினமான" மீட்புப்பணி என விவரித்துள்ளார்.
வெனிசுவேலா, சிலி, கோஸ்டாரிகா, எல் சல்வடோர், மெக்சிகோ, போர்த்துக்கல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த கூட்டு மீட்புக்குழுவினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இடிபாடுகளுக்குள் கெமராக்களை அனுப்பி, அவருக்கு முகமூடி,கண்ணாடி, தண்ணீர் மற்றும் குளுக்கோஸ் போன்றவற்றை வழங்கி தொடர்ந்து உரையாடி உத்வேகமளித்துள்ளனர்.
இவ்வளவு பெரிய இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த போதிலும், அவருக்கு ஒரு நகம் கூட சேதமடையாமல் மிக ஆரோக்கியமாக மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Latest News
வைபவ் சூர்யவன்ஷிக்கு இங்கிலாந்து நட்சத்திர வீரர் பாராட்டுடன் எச்சரிக்கை!
Local
04 July 2026
மீண்டும் திரையரங்கம் வரும் "ரன்"
Local
04 July 2026
TIN இல்லையென்றால் சிக்கலா? பொதுமக்களுக்கு முக்கிய விளக்கம்
Local
04 July 2026
டெங்கு பரவலைக் கட்டுபடுத்த 6 முன்மொழிவுகள் முன்வைப்பு
Local
04 July 2026
சபரகமுவ பல்கலைக்கழகத்தின் சவூதி நிதி உதவி மருத்துவ பீடம் இன்று திறந்துவைப்பு: பிரதமர் ஹரிணி தலைமை
Local
04 July 2026
காவ்யா மாறன் வாங்கிய பாகிஸ்தானின் முன்னணி வீரர் குழப்பத்தில்!
Local
04 July 2026
புதிய வரி மாற்றங்கள் மக்களுக்கு கூடுதல் சுமையா? நிபுணர் எச்சரிக்கை
Local
04 July 2026
பயங்கரவாத தடைச் சட்டத்தின் பயன்பாட்டை உடனடியாக நிறுத்தி வைக்குமாறு ஐநா கோரிக்கை!
Local
04 July 2026
நாட்டில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு
Local
04 July 2026
நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த காற்று - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
Local
04 July 2026