General04 July 2026

லங்கா பிரீமியர் லீக் தொடக்க விழாவில் ட்ரோன் நிகழ்ச்சி

லங்கா பிரீமியர் லீக் தொடக்க விழாவில் ட்ரோன் நிகழ்ச்சி ஒன்றை நடத்த போட்டி அமைப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதன்போது 500 ட்ரோன்களை வானில் பறக்கவிட்டு இந்த நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

லங்கா பிரீமியர் லீக்கின் 6ஆம் கட்டப் போட்டியானது, இந்த மாதம் 17ஆம் திகதி மாலை 7.30 க்கு கொழும்பில் உள்ள SSC மைதானத்தில் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் காலி அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes