International05 July 2026

விண்வெளியிலிருந்து பூமியின் துருவ ஒளி : விண்வெளி வீராங்கனை சோஃபி அடெனாட் பகிர்ந்த காணொளி வைரல்!

பூமியின் மேலே நெளிந்து வளைந்து செல்லும் துருவ ஒளியின் (Aurora) ரம்மியமான காட்சிகளை உள்ளடக்கிய காணொளி ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

விண்வெளி வீராங்கனை சோஃபி அடெனாட் (Sophie Adenot) தனது 'எப்சிலோன்' (Epsilon) விண்வெளிப் பயணத்தின் போது இந்தத் துருவ ஒளியின் காட்சிகளைப் பதிவு செய்துள்ளார்.

விண்வெளியிலிருந்து பூமியின் அழகை விபரிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த காணொளியை விண்வெளி வீராங்கனை சோஃபி அடெனாட் பகிர்ந்ததை அடுத்து, அதன் ரம்மியமான காட்சிகள் சமூக வலைத்தள பயனர்கள் பலராலும் பரவலாகப் பகிரப்பட்டு, இணையத்தில் அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes