General05 July 2026

நெடுந்தீவில் முதன்முறையாக எரிபொருள் நிரப்பு நிலையம்

நெடுந்தீவில் முதன்முறையாக எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

நெடுந்தீவின் சுற்றுலாத்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கவும், அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவில் தற்போது நடைமுறையிலுள்ள எரிபொருள் விநியோக செயல்முறை முறையற்றதாகக் காணப்படுவதாகவும், புதிய எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக விநியோகத் திறனையும் மக்கள் அதைப் பெற்றுக்கொள்ளும் வசதியையும் மேம்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (5) நெடுந்தீவில் நடைபெற்றதுடன், இன்னும் சில மாதங்களுக்குள் இதன் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes