General07 July 2026

தங்கப் பிரியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : அதிரடியாக குறைந்த தங்க விலை!

உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை இன்று (07) குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நேற்று (06) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 382,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை 3,000 ரூபாயால் குறைந்து 379,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 379,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 348,700 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,588 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றங்களின் தாக்கத்தால், அண்மைய நாட்களாக உள்நாட்டு தங்க விலையும் ஏற்ற, இறக்கங்களுடன் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes