நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மோதலில் உயிரிழந்த 7 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 20 கைதிகள் உட்பட 27 பேரின் உடலங்களையும் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீர்கொழும்பு தலைமை நீதவான் ஷிலானி பெரேரா இன்று (07) உத்தரவிட்டுள்ளார்.
நீர்கொழும்பு பொது மருத்துவமனையின் விசேட சட்ட மருத்துவ அதிகாரி டபிள்யூ.எஸ்.ஆர். விக்ரமரத்னவுக்கு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து நீர்கொழும்பு தலைமையக தலைமை காவல்துறை பரிசோதகர் திலின தம்சித் ஹெட்டியாரச்சி மற்றும் நீதிமன்ற காவல்துறை அதிகாரி சாஜன் பண்டார ஆகியோர் நீதிமன்றில் விபரங்களை முன்வைத்த போதே இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
உயிரிழந்தவர்களின் குடும்பப் பாதுகாவலர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னரும், பிரேதப் பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னரும் உடலங்களை அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு நீர்கொழும்பு தலைமையக தலைமை காவல்துறை பரிசோதகர் திலின தம்சித் ஹெட்டியாரச்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், இந்த வன்முறைச் சம்பவம் குறித்து முழுமையான மற்றும் விரிவான அறிக்கை ஒன்றினை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் காவல்துறைக்கு நீதவான் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, உடலங்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதவான் வழக்கினை ஒத்திவைத்தார்.
Latest News
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் சர்வதேச சட்டங்களின்படி கடுமையான குற்றம்; நீதியமைச்சர் இராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தல்!
Local
07 July 2026
கொழும்பு கோட்டையில் தொடருந்து தடம் புரள்வு: சேவைகள் கடும் தாமதம்!
Local
07 July 2026
ஆசிய ஒலிப்பரப்பு கூட்டுத்தாபனத்தின் முழுமையான அனுசரனையுடன் ஆசிய மெய்வல்லுநர் போட்டி யாழில்
Local
07 July 2026
“டெங்கு நோயினால் நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகள் மரணித்ததாக கூறப்படுவது பொய்”
Local
07 July 2026
எம்.பிக்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கான எரிபொருள் கட்டுப்பாடுகள் நீக்கம்
Local
07 July 2026
உச்சநீதிமன்றத்தில் அதிரடி திருப்பம் : கரூர் நெரிசல் வழக்கு மனுவைத் திரும்பப் பெற்றது திமுக!
Local
07 July 2026
"அரசின் பொறுப்பில் உள்ள கைதிகளின் உயிருக்கு பாதுகாப்பு எங்கே?" – நாடாளுமன்றத்தில் அரசாங்கம் மீது சாடல்
Local
07 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை குறித்து முன்கூட்டிய உளவுத் தகவல் கிடைத்ததா?
Local
07 July 2026
யானைத்தந்த வழக்கில் சிக்கிய மோகன்லால் - விசாரணையில் வெளியவந்த பொருட்கள்
Local
07 July 2026
புதையல் திருட்டுக்கு பின்னால் அரசியல் பின்னணி": பிரேமதாச, ராஜபக்ச குடும்பங்கள் குறித்து சபையில் குற்றச்சாட்டு!
Local
07 July 2026