General08 July 2026

குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு 2027ஆம் ஆண்டுக்கான பாதீடு திட்டத்தில் விசேட ஏற்பாடுகள்

மக்களின் நீண்டகாலப் பிரச்சினையான குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு 2027ஆம் ஆண்டுக்கான பாதீடு திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான நிதித் தேவைகள் குறித்து இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மேலும் மீள்குடியேற்ற வேலைத்திட்டம் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் வேலைத்திட்டத்தை விரைவுபடுத்துமாறும், குறைந்த வருமானம் உடையவர்களின் பகுதியளவில் கட்டப்பட்ட வீடுகளுக்கு வீட்டுவசதி உதவி வழங்கும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
Related recommendation
Hiru TV News | Programmes