General09 July 2026

வெல்லம்பிட்டி பகுதியில் 32 இலட்சம் பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

வெல்லம்பிட்டி பகுதியில் சுமார் 32 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின், ஐஸ் மற்றும் போதை மாத்திரைகளுடன் பெரும் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

வெல்லம்பிட்டி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட உமதிலிய பொது விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள நீர்த் தாங்கிக்கு அருகில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் கொலோன்னாவை, தஹம்புர பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய நபர் ஆவார்.

அவரிடமிருந்து 120 கிராம் 710 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 112 கிராம் ஹெரோயின் மற்றும் 25 போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக வெல்லம்பிட்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes