General12 July 2026

அம்பலாங்கொட பிரதேச சபை உறுப்பினர் சட்டவிரோத துப்பாக்கியுடன் கைது!

அம்பலாங்கொட பிரதேச சபையின், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான அமித் சத்துரங்க சமரநாயக்க, சட்டவிரோத துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளால், சந்தேகநபர் நேற்று (11) கைது செய்யப்பட்டார்.

பத்தேகம, தித்தேலியாவில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்த போது, சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடம் சட்டவிரோதமாக இருந்த 'ரிப்பீட்டர்' ரக துப்பாக்கி ஒன்று காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes