instagram தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய AI தொழில்நுட்பம் ஒன்று, கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து திடீரென நீக்கப்பட்டுள்ளது.
instagramஇன் தாய் நிறுவனமான மெட்டா, 'மியூஸ் இமேஜ்' (Muse Image) என்ற புதிய AI தொழில்நுட்பத்தை செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது.
இந்த வசதியைப் பயன்படுத்தி, பொதுவெளியில் இருக்கும் instagram கணக்குகளில் உள்ள புகைப்படங்களைக் கொண்டு, எவரும் AI மூலம் புதிய படங்களை உருவாக்க முடியும்.
இந்த வசதி, பயனர்களின் அனுமதியின்றி அவர்களின் புகைப்படங்களைப் பயன்படுத்த வழிவகுப்பதாகக் கூறி கடும் எதிர்ப்பு கிளம்பியது.
குறிப்பாக, பயனர்கள் அனைவரும் முன்னிருப்பாகவே (Default) இதில் இணைக்கப்பட்டிருந்தது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்த தொழில்நுட்பம் தனியுரிமையை மீறுவதாக, Sag-Aftra மற்றும் 'Privacy International' போன்ற அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
மக்களின் கருத்துகளைத் தவறாகக் கணித்துவிட்டதாக ஒப்புக்கொண்ட மெட்டா நிறுவனம், இந்த வசதியை உடனடியாகத் திரும்பப் பெற்றுள்ளது.
மேலும், இது போன்ற தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் மக்கள் கருத்துக்கு மதிப்பளிப்பதாகக் குறித்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Latest News
நோர்வேயை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து!
Local
12 July 2026
தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்
Local
12 July 2026
பல்கலைக்கழக மாணவர்களுக்கு நற்செய்தி
Local
12 July 2026
கல்வித் துறையில் அனைவருக்கும் சம உரிமை: பிரதமர் கருத்து!
Local
12 July 2026
2050இல் 35 மில்லியன் பேருக்கு புற்றுநோய் பாதிப்புகள்: உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை!
Local
12 July 2026
முதல் கிரேண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் நோஸ்கோவா
Local
12 July 2026
பயனர் தரவு பாதுகாப்பு சர்ச்சை - instagramஇன் வசதி திடீர் நீக்கம்!
Local
12 July 2026
ICC Hall of Fame பட்டியல் - உச்சகட்ட கௌரவத்தை பெற்ற 3 நட்சத்திரங்கள்!
Local
12 July 2026
எஸ்.ஜானகி மறைவு: தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல்
Local
12 July 2026
டி20 தரவரிசையில் முதலிடத்தை இழந்தது இந்தியா!
Local
12 July 2026