திறைசேரியின் மின்னஞ்சல் கட்டமைப்பு 2019 ஆம் ஆண்டு முதல் காலாவதியான நிலையில் இருப்பதாக, இலங்கை கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு, அரசாங்க நிதி பற்றிய குழுவில் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டுக் கடன் தவணையாகச் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள், வேறொரு தரப்பினரின் கைக்குச் சென்ற சம்பவம் குறித்து ஆராயும் போதே இந்தக் கருத்து வெளியிடப்பட்டது.
குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா மற்றும் திறைசேரியின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோர் குறித்த கூட்டத்தில் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
திறைசேரியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மூன்றாம் தரப்புக்குச் சென்ற இந்தச் சம்பவம், இணையக் குற்றத்துடன் தொடர்புடைய மோசடி என அரசாங்க நிதி பற்றிய குழு உறுதி செய்துள்ளது.
இது குறித்த விரிவான அறிக்கையை குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இந்த அறிக்கையில் குறித்த மோசடி தொடர்பான கண்டறிதல்கள் மட்டுமன்றி, எதிர்காலத்திற்கான முக்கிய பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
Latest News
சர்வதேச சந்தையில் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்த தங்கம் மற்றும் வெள்ளி விலை
நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு
திறைசேரியின் மின்னஞ்சல் கட்டமைப்பு 2019 முதல் காலாவதியான நிலையில்!
தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த இலங்கைத் தம்பதி கைது
இன்று மீண்டும் திறக்கப்படுகிறது கொழும்பு கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம்!
மீரிகமவில் புதிதாக சிறுநீரக கல் அகற்றும் சிகிச்சை மையம் திறப்பு!
ஈரானுக்கு எதிராக மீண்டும் தாக்குதலை ஆரம்பித்தது அமெரிக்கா!
பேங்கொக் களியாட்ட விடுதியில் தீப்பரவல்: 27 பேர் உயிரிழப்பு
விம்பிள்டன் பட்டத்தைத் தக்கவைத்தார் ஜன்னிக் சின்னர்!
காவல்துறை அதிகாரிகள் சட்டத்துறை சார்ந்த நிபுணத்துவம் பெற வேண்டும்: ரவூப் ஹக்கீம்