இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகப் பகுதிகள் மற்றும் கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பெரும்பான்மையான வாக்கு வங்கியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் இன்று சந்தித்து, முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள விருந்தகமொன்றில் இன்று பிற்பகல் இந்த முக்கிய நிகழ்வு நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் குறைகளையும் நிறைகளையும் மக்கள் மத்தியில் வெளிப்படையாகவும் கூட்டாகவும் முன்வைப்பதற்கான பொதுவான மேடையொன்றை உருவாக்குவதே இந்தச் சந்திப்பின் நோக்கம் என அவர் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் நாட்டின் பல முக்கிய விவகாரங்களில் அலட்சியப் போக்குடன் செயற்படுவதாகச் சுட்டிக்காட்டிய ரவூப் ஹக்கீம், மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் அரசாங்கத்திற்கு முறையான அழுத்தங்களை வழங்க இந்த கூட்டு அரசியல் முயற்சி மிகவும் அவசியமானது என்றார்.
அரசியல் என்பது சாத்தியமானவற்றைச் சாதிக்கும் ஒரு கலையாகும் எனக் குறிப்பிட்ட அவர், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணக்கூடிய பொதுவான உபாயங்களை ஒன்றிணைந்து கண்டறிவதே இந்த சந்திப்பின் அடிப்படை என வலியுறுத்தினார்.
தமிழ் பேசும் கட்சிகளின் இந்த ஒற்றுமை முயற்சி காலத்தின் கட்டாயத் தேவை என்று சுட்டிக்காட்டிய ரவூப் ஹக்கீம், இத்தகைய அரசியல் முனைப்பானது சமூகங்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.
முன்னதாக பல கட்டங்களால் தமிழ் பேசும் கட்சிகளிடையே, பேச்சுவார்த்தை இடம்பெற்று வந்த நிலையில் இன்று முக்கிய தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்
உரிமைகளைப் பாதுகாக்கவும், அரசாங்கத்தின் அரசியல் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மத்தியில் சிறுபான்மை மக்களின் நலன்களை உறுதிப்படுத்தவும் இந்த ஒன்றிணைந்த பயணம் அடித்தளமாக அமையும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

Latest News
அரசியலுக்குள் கலந்துவிட்ட பிரேசிலின் கால்பந்து ஜேர்சி
Local
17 July 2026
ஈரானின் உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள்: குற்ற நோக்கம் கொண்டவை
Local
17 July 2026
ஜோ ரூட் அபாரம் - இங்கிலாந்து அணி வெற்றி
Local
17 July 2026
கடுவல பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு
Local
17 July 2026
30-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் 'ஜனநாயகன்': பிரம்மாண்ட வெளியீட்டிற்குத் தயாராகும் படக்குழு
Local
16 July 2026
விரைவில் திரைக்கு வருகிறது சூர்யா 47
Local
16 July 2026
இங்கிலாந்து கோல்கீப்பரின் பெனால்டி குறிப்புகள் வைரல்
Local
16 July 2026
கடுவலயில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!
Local
16 July 2026
அன்பைத் தேடுபவர்களுக்கு ஒரு நற்செய்தி : . இளஞ்சிவப்பு நிறக் கூடைகள் மூலம் புதிய முயற்சி!
Local
16 July 2026
'அந்தப் படத்தை எடுக்கத்தான் ஆசை' : தனது கனவுத் திரைப்படம் குறித்துப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்
Local
16 July 2026