General13 July 2026

பிள்ளையானின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு!

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, 'பிள்ளையான்' என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை, எதிர்வரும் 24ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes