General14 July 2026

சிறுமியிடம் அத்துமீறியவருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

கம்பளை பகுதியில் 12 வயதான தமது பேத்தியிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து தவறான முறையில் நடந்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமிக்கு ஏற்பட்ட சிறுநீரகத் தொற்று காரணமாக கம்பளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே இந்த சம்பவம் வெளியாகியுள்ளது.

சம்பவம் குறித்து தகவலறிந்து விசாரணைகளை ஆரம்பித்த கம்பளை காவல்துறையினர், 54 வயதுடைய சந்தேகநபரை கைது செய்து கம்பளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.

இதனையடுத்து, சந்தேகநபரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes