நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நிர்வாக மாற்றங்களை மேற்கொள்ளும்போது, குறிப்பிட்ட நபர்களின் நலன்களை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் முழு நாட்டையும் பிரதிபலிக்கும் வகையில் செயற்பட வேண்டும்.
இத்தகைய முக்கிய தீர்மானங்களை எடுக்கும்போது, துறைசார் நிபுணர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசித்து, வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும்.
மக்கள் அனைவரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் சூழலில், இவ்வாறான நடைமுறைகள் சாதாரண ஊழியர்களுக்கு இழைக்கும் பாரபட்சமாகவே அமையும்.
அரசாங்கம் முன்னெடுக்கும் எந்தவொரு நிர்வாக மாற்றமும் ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் மக்களின் நலன்களை மையப்படுத்தியதாகவும் அமைய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Latest News
பதுளை மாநகர சபை உறுப்பினர் மஹிந்த குணசேகர பதவி விலகல்: புதிய உறுப்பினர் பதவியேற்பு
Local
14 July 2026
நீதியரசர்கள் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்? அமைச்சரவை பேச்சாளர் விளக்கம்!
Local
14 July 2026
தமிழுக்கு மீண்டும் பெருமை! ஞானபீடம் வென்ற கவிஞர் வைரமுத்து
Local
14 July 2026
இயக்குநர் அவதாரத்தைத் தொடர்ந்து நடிகராகும் ஜேசன் சஞ்சய் : தந்தை விஜய்யின் பாதையில் புதிய பயணம்!
Local
14 July 2026
வேலை செய்வது போல் பாசாங்கு செய்யும் Gen Z தலைமுறை: ஆய்வில் வெளியான தகவல்
Local
14 July 2026
ஆட்சி மாற்றத்திற்கு சிறுவர்கள் காரணமா? - தவெக மீது தொடரும் குற்றச்சாட்டுகள்
Local
14 July 2026
ஜனநாயக விரோத செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்
Local
14 July 2026
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு
Local
14 July 2026
தங்கத்தின் விலை மீண்டும் சரிவு : நகை வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு நற்செய்தி!
Local
14 July 2026
உலகை திரும்பிப் பார்க்க வைத்த இந்தியா - பாலைவனத்தில் பிறக்கும் பசுமை மின் நகரம்
Local
14 July 2026