2026 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடர் ஆரம்பமாவதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்னதாக, வீரர் ஒருவருக்குத் கையூட்டல் வழங்கிப் போட்டி முடிவுகளை மாற்றியமைக்க முயற்சித்த குற்றச்சாட்டில் Jaffna Kings அணியின் இணை உரிமையாளர் மன்ஜோத் கல்ரா இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விளையாட்டுத் தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் விசேட விசாரணைப் பிரிவினரால், கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போட்டி முடிவுகளில் செல்வாக்குச் செலுத்துவதற்காக, வீரர் ஒருவருக்கு 9.5 மில்லியன் ரூபாயை கையூட்டலாக வழங்க மன்ஜோத் கல்ரா முயற்சித்துள்ளார்.
சுமார் 10 நாட்களுக்கு முன்னரே குறித்த வீரர் இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட நீண்டகால விசாரணைக்குப் பின்னரே இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள மன்ஜோத் கல்ரா, இந்திய 19 வயதுக்குட்பட்ட அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரராவார். பிருத்வி ஷா, சுப்மன் கில், அர்ஷ்தீப் சிங் மற்றும் சிவம் மாவி உள்ளிட்ட முன்னணி வீரர்களுடன் இணைந்து, 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பைத் தொடரை வென்ற இந்திய அணியில் அவர் முக்கிய உறுப்பினராகச் செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Latest News
பூமியைப் போன்ற வளிமண்டலம் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு!
Local
19 July 2026
ஈரானிய தாக்குதல்களில் அமெரிக்க வீரர்கள் உயிரிழப்பு
Local
19 July 2026
ட்ரம்ப்பின் பதிவுகளுக்கு இனி 100,000 அமெரிக்க டொலர் கட்டணம்!
Local
19 July 2026
அமெரிக்க ஜனாதிபதியின் கையொப்பம் பெறுமதியற்றது: ஈரானின் உச்ச தலைவர் குற்றச்சாட்டு!
Local
19 July 2026
அமெரிக்காவை நிலைகுலைய வைக்கும் காலநிலை!
Local
19 July 2026
களத்தில் மட்டுமல்ல, சமூக வலைதளங்களிலும் சக்கைப்போடு போடும் கால்பந்து நட்சத்திரங்கள்!
Local
19 July 2026
வடக்கின் குடும்ப விழா 2026 - வருடாந்த மகோற்சவத்தின் பூர்வாங்க கலந்துரையாடல்
Local
18 July 2026
உலகக் கிண்ணக் கால்பந்து இறுதிப்போட்டி - வெற்றி யாருக்கு?
Local
18 July 2026
செம்மணியில் தொடரும் அகழ்வு: 36ஆவது நாளில் 6 புதிய என்புக்கூடுகள்!
Local
18 July 2026
இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது ஈரான்!
Local
18 July 2026