அமெரிக்கா தற்போது ஒரே நேரத்தில் 3 முனைகளில் தீவிர காலநிலை பேரிடர்களை சந்தித்து வருகின்றது.
இதனால் அந்த நாட்டின் பல பகுதிகள் ஸ்தம்பித்துள்ளன.
கனடாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயின் புகை அமெரிக்காவின் கிழக்கு மற்றும் மத்திய மேற்கு மாநிலங்களை மூடியுள்ளது.
சிகாகோ உட்பட பல நகரங்களில் காற்றின் தரம் மிகவும் அபாயகரமான நிலையை எட்டியுள்ளதால், சுமார் 10 கோடி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
டெக்சாஸ் மாநிலத்தில் கடந்த 3 நாட்களாகப் பெய்து வரும் வரலாறு காணாத அடைமழையால் 'ஹில் கண்ட்ரி' பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அதில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர், நூற்றுக்கணக்கானோர் மீட்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் 15 மாநிலங்களில் 68க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிகின்றது.
குறிப்பாக பசுபிக் வடமேல் பகுதியில் மின்னல் தாக்குதலால் 17 புதிய காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
17,400க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காலநிலை மாற்றத்தின் காரணமாக வளிமண்டலம் வெப்பமடைந்து, மண்ணின் ஈரப்பதத்தை உறிஞ்சிவதால் காட்டுத்தீ ஏற்படுகிறது.
அதே சமயம் அதிக நீராவியை சேமித்து வைத்து திடீர் பெருமழையையும் உருவாக்குவதாக விஞ்ஞானிகள் விளக்குகின்றனர்.
இந்த "கூட்டுப் பேரிடர்கள்" சாதாரண பேரிடர்களை விட பல மடங்கு ஆபத்தானவை என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
Latest News
பிலியந்தலையில் துப்பாக்கிச்சூடு : போதைப்பொருள் வலையமைப்பின் மீது காவல்துறையினரின் அதிரடி தாக்குதல்!
Local
19 July 2026
வரி செலுத்தாதோருக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Local
19 July 2026
இரத்மலானை குடியிருப்பு வளாகத்தில் தீப்பரவல் – தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!
Local
19 July 2026
உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் - வரலாறு படைத்த எம்பாப்பே
Local
19 July 2026
மீண்டும் எகிறிய எண்ணெய் விலை!
Local
19 July 2026
மனவலிமையால் ஜொலிக்கும் யாஸ்திகா பாட்டியா!
Local
19 July 2026
இஸ்ரேலியர்களால் தாக்கப்பட்ட முக்கிய கால்பந்தாட்ட வீரர் உயிரிழப்பு
Local
19 July 2026
வடக்கின் குடும்ப விழாவில் சினிமா பாடல்கள்,ஆடல் பாடல்களுக்கு தடை!
Local
19 July 2026
கோல் மழை பொழிந்த இங்கிலாந்து - பிரான்ஸை வீழ்த்தி அபார வெற்றி!
Local
19 July 2026
கால்பந்து உலகக் கிண்ண இறுதிப்போட்டி: ஸ்பெயின் அணியின் பயிற்சி அமர்வு இரத்து!
Local
19 July 2026