டொனால்ட் ட்ரம்ப்பின் 'ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத் தளம், முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் வோல் ஸ்ட்ரீட் வர்த்தகர்களுக்கு ஒரு புதிய கட்டணத் திட்டத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட மிக முக்கியமான 10 கணக்குகளின் பதிவுகளை, மற்றவர்களை விட மிக வேகமாகப் பெறுவதற்காக, மாதத்திற்கு 100,000 அமெரிக்க டொலர் வரை கட்டணம் வசூலிக்க அந்த நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
'Truth API' எனப்படும் இந்த தரவுத் தொகுப்பு மூலம், வர்த்தக நிறுவனங்கள் மில்லி செக்கன்ட் இடைவெளியில் பதிவுகளைப் பெற்று, சந்தை மாற்றங்களை சாதகமாக்கிக்கொள்ள முடியும்.
3 வருட ஒப்பந்தத்திற்கு மாதாந்தம் 60,000 டொலர் என்ற தள்ளுபடி விலையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும் ஜனநாயகக் கட்சியினர் இந்த திட்டத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
ஜனாதிபதி பதவியைப் பயன்படுத்தி ட்ரம்ப் இலாபம் ஈட்டுவதாகவும், வோல் ஸ்ட்ரீட் வர்த்தகர்களை செழுமைப்படுத்துவதாகவும் செனட்டர் எலிசபெத் வோரன் குற்றம் சாட்டியுள்ளார்.
ட்ரம்பின் பதிவுகளை வேகமாக பெறப் பணம் செலுத்துவது "மிகவும் நெறிமுறையற்ற செயல்"என கண்காணிப்பு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இருப்பினும், சட்ட ரீதியாக இது எந்தளவுக்குப் பொருந்தும் என்பதில் தெளிவின்மை நிலவுகின்றது.
இந்தநிலையில் 2026 ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் இந்த சேவை நடைமுறைக்கு வரவுள்ளது.
Latest News
பிலியந்தலையில் துப்பாக்கிச்சூடு : போதைப்பொருள் வலையமைப்பின் மீது காவல்துறையினரின் அதிரடி தாக்குதல்!
Local
19 July 2026
வரி செலுத்தாதோருக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Local
19 July 2026
இரத்மலானை குடியிருப்பு வளாகத்தில் தீப்பரவல் – தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!
Local
19 July 2026
உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் - வரலாறு படைத்த எம்பாப்பே
Local
19 July 2026
மீண்டும் எகிறிய எண்ணெய் விலை!
Local
19 July 2026
மனவலிமையால் ஜொலிக்கும் யாஸ்திகா பாட்டியா!
Local
19 July 2026
இஸ்ரேலியர்களால் தாக்கப்பட்ட முக்கிய கால்பந்தாட்ட வீரர் உயிரிழப்பு
Local
19 July 2026
வடக்கின் குடும்ப விழாவில் சினிமா பாடல்கள்,ஆடல் பாடல்களுக்கு தடை!
Local
19 July 2026
கோல் மழை பொழிந்த இங்கிலாந்து - பிரான்ஸை வீழ்த்தி அபார வெற்றி!
Local
19 July 2026
கால்பந்து உலகக் கிண்ண இறுதிப்போட்டி: ஸ்பெயின் அணியின் பயிற்சி அமர்வு இரத்து!
Local
19 July 2026