இலங்கைத் தமிழ் ஏதிலி குடும்பத்தைச் சேர்ந்தவரும், பிரித்தானியாவின் 'ஸ்ட்ராட்ஃபோர்ட் அண்ட் போ' (Stratford and Bow) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான உமா குமரன், பிரித்தானிய வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் நாடாளுமன்ற பிரதிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்ற வரலாற்றில் அமைச்சுப் பொறுப்பொன்றை ஏற்ற முதலாவது இலங்கைத் தமிழ் வம்சாவளிப் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது புதிய நியமனம் குறித்து சமூக ஊடகத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள உமா குமரன், உலகளவில் பதற்றமும் சவால்களும் நிறைந்த இந்தக் காலகட்டத்தில், பிரித்தானியாவின் சர்வதேச தலைமைத்துவத்தையும் வெளியுறவுக் கொள்கையையும் பிரதிநிதித்துவப்படுத்தி நாட்டிற்குச் சேவை செய்யக் கிடைத்த வாய்ப்பு தனக்குக் கிடைத்த பெரும் கௌரவம் எனத் தெரிவித்துள்ளார்.
கிழக்கு லண்டனில் பிறந்த உமா குமரனின் பெற்றோர், இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது ஏதிலிகளாக பிரித்தானியா சென்றடைந்தனர்.
அக்காலகட்டத்தில் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜெரமி கார்பினின் தலையீட்டின் மூலமே அவர்களுக்குப் பிரித்தானியாவில் குடியுரிமை கிடைத்தது.
இவர் லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் இளங்கலைப் பட்டத்தையும், பொதுக் கொள்கையில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
Latest News
பட்லருக்கு ரோகித் கொடுத்த மறக்க முடியாத அன்புப் பரிசு: இன்ஸ்டாகிராமில் வைரலாகும் பதிவு!
Local
25 July 2026
ஒரே வீட்டில் 20 ஆண்டுகள் மௌனம் - பின்னணியை அறிந்து அதிர்ந்த ஊடகங்கள்
Local
25 July 2026
நீட் போராட்ட மேடையில் சர்ச்சை! எதிர்ப்பால் வெளியேறிய நடிகை சனம் ஷெட்டி
Local
25 July 2026
இலங்கையில் போதைப்பொருள் வழக்கில் தேடப்பட்ட இருவர் இராமேஸ்வரத்தில் கைது
Local
25 July 2026
சீன நாட்டவரின் மரணம் : சீன நாட்டவர்களைக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி
Local
25 July 2026
28ஆவது அகவையை கொண்டாடும் சூரியன் எப் எம் வானொலி
Local
25 July 2026
ஜனநாயகனை மீண்டும் பார்க்கப்போகும் தமிழக முதல்வர்!
Local
25 July 2026
லங்கா பிரீமியர் லீக் போட்டி நிர்ணயம்: விசாரணையில் சர்வதேச பேரவை
Local
25 July 2026
கிழக்கு ஐரோப்பாவில் பரபரப்பு: எல்லை மீறிய ரஷ்ய ஆளில்லா வானூர்தியை சுட்டு வீழ்த்தியது ருமேனியா!
Local
25 July 2026
அரசாங்கக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு சவால் விடுத்துள்ள சட்டத்தரணிகள் சங்கம்!
Local
25 July 2026