International25 July 2026

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் பதவிக்காலம் நீடிப்பு

ரஷ்யா, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கின் (Volker Turk) பதவிக் காலத்தை மேலும் நான்கு ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அதிகப்படியான வாக்குகளால் ஒப்புதல் அளித்துள்ளது.

193 உறுப்பு நாடுகளைக் கொண்ட பொதுச் சபையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில், 144 நாடுகள் ஆதரவாகவும், 10 நாடுகள் எதிராகவும் வாக்களித்ததுடன் 13 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் விலகியிருந்தன.

முன்னதாக, வோல்கர் டர்க்கின் பதவிக் காலத்தை 2026-ஆம் ஆண்டின் இறுதி வரை, அதாவது இரண்டு மாதங்களுக்கு மட்டுமே நீடிக்க வேண்டும் என்ற ரஷ்யாவின் மாற்றுக் முன்மொழிவுக்குப் பெரும்பாலான நாடுகள் எதிராக வாக்களித்தன.

அதேநேரம், கடந்த காலத்தில் வோல்கர் டர்க்குடன் நெருக்கமாகப் பணியாற்றியவரும், வரும் டிசம்பர் மாதத்துடன் பதவியிலிருந்து விலகவுள்ளவருமான ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டரஸ், எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் முடிவடையும் டர்க்கின் பதவிக் காலத்தை மேலும் நான்கு ஆண்டுகளுக்கு நீ;டிக்குமாறு முன்மொழிந்திருந்தார்.

Related recommendation
Hiru TV News | Programmes