International25 July 2026

ஹூ_தி தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள யேமன் மீது சவூதி தலைமையிலான கூட்டணிப் படைகள் தாக்குதல்

ஹூ_தி தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள யேமன் மீது சவூதி தலைமையிலான கூட்டணிப் படைகள் தாக்குதலை நடத்தியுள்ளன.

அத்துடன் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக சவூதி தலைமையிலான கூட்டணி கூட்டுப் படைகளின் கட்டளை மையம் அறிவித்துள்ளது.

இதன்படி, யேமனின் ஹொடைடாவில் உள்ள ஹூ_தி தளங்களைத் தாக்கியதாகவும், ஹொடைடா துறைமுகத்தைத் தாக்கவில்லை என்றும், அந்த மாகாணத்தில் உள்ள அனைத்து கப்பல் துறைமுகங்களும் திறந்தே இருப்பதாகவும், சவூதி தலைமையிலான கூட்டணி கூட்டுப் படைகளின் கட்டளை மையம் கூறியுள்ளது.

குண்டு வீசப்பட்ட அனைத்து இலக்குகளும் "செங்கடலில் வர்த்தகக் கப்பல்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களுடன் தொடர்புடையவை" என்று அந்த கட்டளை மையம் கூறியது.

எனினும் ஹொடைடா நகரில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனத்திற்குச் சொந்தமான வசதிகள் மீதான தாக்குதலுக்கு சவூதி அரேபியாவே காரணம் என்று ஹ_தி வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

இது "பதற்றத்திற்கு மேல் பதற்றத்தை" ஏற்படுத்தும் என்று அல் மசிரா டிவி செய்தி வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

"யேமன் மீதான முற்றுகையை நீக்குவதற்கான நியாயமான மற்றும் நேர்மையான கோரிக்கைக்கு இணங்குவதற்குப் பதிலாக, சவூதி ஆட்சி ஒரு பெரும் முட்டாள்தனத்தைச் செய்துள்ளது.

அது அதற்குப் பெரும் விலையைக் கொடுக்கும்," என்று அமைச்சகத்தின் அறிக்கை கூறியது.

கமரன் தீவையும் சவூதி தலைமையிலான படைகள்; தாக்கியதாகவும், "அதன் விளைவாக ஒரு பெண் காயமடைந்தார்" என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes