போர்ட் சிட்டி என்ற கொழும்பு துறைமுக நகரத்தில் இருந்து சீன நாட்டவர் ஒருவரைக் கடத்திச் சென்று, மரணத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சீன நாட்டவர் இரண்டு பேரை 48 மணி நேரம் காவலில் வைத்து விசாரிக்கக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தச் சந்தேக நபர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சீன நாட்டவரின் உடல், எஹெலியகொடவின் வனப்பகுதி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது.
காவல்துறையின் கூற்றுப்படி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மூன்று சீன நாட்டினர் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்காக அதிகாலை வேளையில் வாடகைச் சிற்றுந்து ஒன்றில் கொழும்பு துறைமுக நகரப் பகுதிக்குச் சென்றுள்ளனர்.
அங்கு இரண்டு வாகனங்களில் சென்ற மற்றொரு சீனக் குழுவினர், அவர்களைத் தாக்கியுள்ளனர். பின்னர் அவர்களில் ஒருவரைக் கடத்திச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
சந்தேக நபர்கள் தாங்கள் பயணித்த வாகனங்களில் ஒன்றை துறைமுக நகர வாகனத் தரிப்பிடத்திலேயே கைவிட்டுச் சென்றதாகவும், பின்னர் அந்த வாகனத்திலிருந்து காற்றுத் துப்பாக்கி (Air rifle) ஒன்று மீட்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், சட்டவிரோத மதுபானச் சோதனை நடத்துவதற்காக எஹெலியகொட கரந்தன பகுதிக்குச் சென்றிருந்த எஹெலியகொட காவல்துறையினர் குழு, அருகிலுள்ள காடு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான பாறைக் குவியல் ஒன்றைக் கண்டுள்ளது.
அதில் இருந்து மனிதக் கையின் ஒரு பகுதி வெளியில் தெரிந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
மேலதிக விசாரணையில், அந்த உடல் எச்சங்கள் சீன நாட்டவர் ஒருவருக்குச் சொந்தமானவை என்பது உறுதி செய்யப்பட்டன.
பின்னர், அவை கொழும்பு துறைமுக நகரத்திலிருந்து கடத்தப்பட்ட சீன நாட்டவருடையது என்றும் அடையாளம் காணப்பட்டன.
பின்னர், அவை கொழும்பு துறைமுக நகரத்திலிருந்து கடத்தப்பட்ட சீன நாட்டவருடையது என்றும் அடையாளம் காணப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகளுக்காக அந்த உடல் நேற்று முன்தினம் பிற்பகல் அவிசாவளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகே வாகனம் ஒன்றையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவரின் உடலைக் கொண்டு செல்ல சந்தேகநபர்கள்; அதைப் பயன்படுத்தியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இதனையடுத்து நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் இரண்டு சீன நாட்டவர்கள், கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்திற்கு அருகே கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.
குறித்த சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காகக் கடலோரக் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த குற்றச்செயலுடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் மற்ற சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்கின்றன.
அத்துடன் சீன நாட்டினருக்கு இடையேயான இந்த மோதலுக்கான நோக்கம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.
Latest News
24 மணி நேரத்தில் 303 மில்லியன் பார்வைகள் - இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடி புதிய சாதனை
Local
25 July 2026
ஒற்றைப் பரீட்சை ஒரு உயிரைப் பறிக்கக் கூடாது - பரீட்சை முறையில் மாற்றம் கோரும் கமல்ஹாசன்
Local
25 July 2026
இந்திய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல்!
Local
25 July 2026
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை இலக்குவைத்த ஏவுகணைகள் தடுத்து அழித்தது சவூதியிலுள்ள கிரேக்க வான் பாதுகாப்பு படை!
Local
25 July 2026
இன்று முதல் அரசியலில் தலையிடமாட்டேன்: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு!
Local
25 July 2026
ஒன்றிணைந்து செயற்படும் ஆறு தமிழ் பேசும் கட்சிகள் ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திக்க முடிவு!
Local
25 July 2026
இந்திய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்
Local
25 July 2026
”நான் தைபொய்ட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட போதிலும் போராட்டம் தொடரும்” – CJP நிறுவுனர் அபிஜித் தீப்கே
Local
25 July 2026
அழகு குறித்து கருத்து வெளியிட்ட ராஷ்மிகா
Local
25 July 2026
கம்பளை பகுதியில் ஆணொருவரின் உடலம் மீட்பு
Local
25 July 2026