பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் காட்டுத்தீ தீவிரமடைந்துள்ள நிலையில், சுமார் 2,50,000க்கும் அதிகமான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென்மேற்கு பிரான்ஸில் வீசிவரும் பலத்த காற்று மற்றும் அதிக வெப்பம் காரணமாகக் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதுடன், தீயானது போர்டோ (Bordeaux) நகரை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.
இதேவேளை, ஸ்பெயினிலும் காட்டுத்தீ அச்சுறுத்தல் காரணமாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்கு ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஐரோப்பா முழுவதும் காட்டுத்தீயின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் தனது அவசரகால உதவிப் பொறிமுறையைச் செயற்படுத்தி, பிரான்ஸுக்கு மேலதிக மீட்புப் படைகள் மற்றும் தீயணைப்பு வானூர்திகளை அனுப்பி வைத்துள்ளது.
Latest News
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை: சுற்றுலா நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம்!
Local
27 July 2026
பெர்லின் தாக்குதல் சந்தேகநபர் காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!
Local
26 July 2026
சிகரெட் - புகையிலை விற்பனைக்கு நிரந்தர தடை; சட்டமொன்றை கொண்டுவர ஏற்பாடு!
Local
26 July 2026
தீவிரமடையும் எல் நினோ: இலங்கைக்கு கடுமையான வறட்சி அச்சறுத்தல்!
Local
26 July 2026
2026 ஜூன் மாதத்தில் சொகுசு வாகனப் பதிவுகள் அதிகரிப்பு
Local
26 July 2026
டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் இலங்கைக்கு கைகொடுக்கும் அமெரிக்கா!
Local
26 July 2026
கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தீ விபத்துகள் அதிகரிப்பு
Local
26 July 2026
இந்த ஆண்டு 250,000 பேருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு
Local
26 July 2026
நோர்மாண்டி D-Day கடற்கரைகள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாகப் பிரகடனம்!
Local
26 July 2026
மதுபோதையில் வாகனம் செலுத்தி இரு யுவதிகள் மீது மோதிய காவல்துறை உயரதிகாரி கைது!
Local
26 July 2026