முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் மீண்டும் ஒன்றிணைவதால் அரசாங்கத்திற்கு எந்தவித சவாலும் இல்லை எனச் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
களுவாஞ்சிகடி பகுதியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னர் இருவரும் ஒன்றாகச் செயற்பட்ட காலத்திலும் சாதனைகளைச் செய்ய முடியாமல் பிரிந்து சென்றதாகவும், தற்போது மீண்டும் இணைவதால் புதிதாக எதனையும் சாதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது சமமான கூட்டிணைவாகக் கருத முடியாது எனத் தெரிவித்த அமைச்சர், ரணில் விக்ரமசிங்க தன்னை மீண்டும் தலைவராக நிலைநிறுத்திக்கொள்ளவும், சஜித் பிரேமதாசவைத் தனக்குக் கீழ் செயற்படும் ஒருவராக மாற்றவுமே இந்தச் சந்திப்புகள் இடம்பெறுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், சந்திப்புகளின்போது ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தல்களை வழங்குவதும், சஜித் பிரேமதாச அவற்றை குறிப்பெடுத்துக்கொள்வது போன்ற தோற்றமே காணப்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இந்தச் சந்திப்புகளின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தவர்களில் பலர் வழக்குகள், விசாரணைகள் அல்லது குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கையூட்டல் ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் எதிர்க்கட்சியினரின் சட்டவிரோதச் செயற்பாடுகள் மற்றும் குற்றப் பின்னணிகள் வெளிச்சத்திற்கு வருவதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்கும் நோக்கிலும் அச்சத்தின் காரணமாகவுமே சஜித் பிரேமதாச, ரணில் விக்ரமசிங்க மற்றும் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோர் ஒன்றிணைந்து சந்திப்புகளை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Latest News
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு: இன்று மீண்டும் விசாரணை!
Local
28 July 2026
மது உற்பத்தி இழப்பு எல்லைக் குறைப்புக்கு மதுபான உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு!
Local
28 July 2026
துறைமுக நகர் மோதலில் சீன நாட்டவர் உயிரிழந்த விவகாரம்: 8 சந்தேக நபர்கள் அடையாளம்!
Local
28 July 2026
பெருந்தோட்ட மக்களின் காணி உரிமைக்காகச் செயற்படுவோம்: சஜித் பிரேமதாச உறுதி!
Local
28 July 2026
படப்பிடிப்பு தளத்தில் விஜய் மற்றும் ஜேசன் சஞ்சய்: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
Local
28 July 2026
எல் நினோ தாக்கம்: நீர் மற்றும் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்த அறிவுறுத்தல்!
Local
28 July 2026
கிரிக்கெட்டை மீட்க களம் இறங்கிய ஜனாதிபதி!
Local
28 July 2026
ஹொரணை மருத்துவமனையில் காவல்துறை உத்தியோகத்தர் மீது தாக்குதல்
Local
28 July 2026
இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக உயர்ந்தது!
Local
28 July 2026
5 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Local
28 July 2026