புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டெங்கு தடுப்பூசியை இலங்கைக்குப் பெற்றுக் கொள்வதற்கான அனுமதி கோரி, கோரிக்கை படிவமொன்று அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
நாட்டில் டெங்கு பரவல் நிலைமை மற்றும் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த மாதத்தில் இதுவரையிலான காலப்பகுதியில் மட்டும் 26,136 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது இந்த ஆண்டில் ஒரு மாதத்தில் அடையாளம் காணப்பட்ட அதிகபட்ச டெங்கு நோயாளர் எண்ணிக்கையாகும்.
எவ்வாறாயினும், எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"டெங்கு நோய்க்கான தடுப்பூசியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நோய் ஏற்படுவதற்கு முன்னர் இந்தத் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்வதன் மூலம் பாதுகாப்புப் பெற முடியும் எனக் கூறப்படுகிறது. இதுவொரு புதிய தடுப்பூசி என்பதால், நோய் தடுப்பில் இது எந்தளவுக்கு வெற்றியளிக்கும் என்று தற்போது கூறுவது கடினம்.
இருப்பினும், பல நாடுகள் இந்தத் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளன. எனவே, இலங்கைக்கு இந்த தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது" என்றும் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நேற்றைய தினத்தில் புதிதாக 500 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இந்த ஆண்டில் இதுவரையில் 61 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.
Latest News
சுட்டெரிக்கும் கடும் வெப்ப அலை - 40 பாகை செல்சியஸைக் கடக்கும் வெப்பநிலை
காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு: 15க்கும் மேற்பட்டோர் காயம்
சவூதி அரேபியா மீதான ஆளில்லா வானூர்தி தாக்குதல்: ஓமான் அரசு கடும் கண்டனம்
ஜெருசலேமிற்கு கிழக்கே புதிய இஸ்ரேலிய குடியிருப்பு : வெளியான தகவல்
கரப்பான் பூச்சிக்கு பிறகு E20 : அடுத்தடுத்து வரும் புதிய அமைப்புகள் காரணம் என்ன?
ஈரான் மோதலில் 600க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் காயம்
கம்பீருக்கு பதிலாக வி.வி.எஸ். லக்ஷ்மன்? வெற்றிக்குப் பின் வெடித்த புதிய விவாதம்!
எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்
ரோஹித்துடன் வைபவ் சூர்யவன்ஷி? முன்னாள் வீரர் அதிரடி யோசனை!
விக்டோரியா நீர்தேக்கத்தில் குறைந்து செல்லும் நீர்மட்டம் :மீண்டும் வெளியே தெரிந்த தெல்தெனிய பழைய நகரம்!