பெருந்தோட்ட மக்களின் காணி உரிமை மற்றும் அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காகப் புதிய கொள்கை ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பலாங்கொடை பகுதியில் நடைபெற்ற ஐக்கிய தோட்ட சேவையாளர் சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு வாக்குறுதிகள் தேர்தல் காலங்களில் மாத்திரம் வழங்கப்படுகின்றன என்றார்.
நாட்டின் தேயிலை பயிரிடப்படும் காணிகளில் 60 சதவீதமானவை பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமாகவுள்ளன.
எனினும், 40 சதவீதமான பயிர்க் காணிகளைக் கொண்டுள்ள சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களே நாட்டின் தேசிய தேயிலை உற்பத்தியில் 70 சதவீத பங்களிப்பை வழங்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரச மற்றும் தனியார் தோட்டக் காணிகள் மற்றும் தேயிலை பயிரிடப்படாத காணிகளை ஒன்றிணைத்து, தோட்ட மக்களைச் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றி, தமது சொந்த நிலத்திலேயே வீடமைத்துக்கொண்டு, அதில் பயிரிடும் ஒரு தேயிலைத் தொழில்முனைவோராக அவர்களை உருவாக்குவதற்கான புதிய கொள்கையை, ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கமொன்றின் கீழ் நடைமுறைப்படுத்தத் தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வுகளை வழங்குவதற்காக ஜனாதிபதி செயலணி ஒன்று தமது ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்படும் எனவும் அவர் இதன்போது உறுதியளித்தார்

Latest News
5 ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா திட்டங்களுக்கு பயன்படுத்த அமைச்சரவை அனுமதி!
Local
28 July 2026
செயற்கை நுண்ணறிவிடம் மனிதர்கள் கட்டுப்பாட்டை இழப்பர் - ஈலோன் மஸ்க் எச்சரிக்கை
Local
28 July 2026
எல் நினோ தாக்கத்தால் நான்கு மாகாணங்கள் வறட்சி ஏற்படும் அபாயத்தில்
Local
28 July 2026
மகன்களை சந்திக்க ரவி மோகனுக்கு அனுமதி : ஜீவனாம்ச வழக்கில் அதிரடி காட்டிய நீதிமன்றம்!
Local
28 July 2026
இந்த ஆண்டில் 10,000 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு!
Local
28 July 2026
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஆழிப்பேரலை எச்சரிக்கை!
Local
28 July 2026
ஹொரணையில் பாரிய சட்டவிரோத இரத்தினக் கல் அகழ்வு முற்றுகை: 25 பேர் கைது!
Local
28 July 2026
விஜய்க்குப் பின் தனுஷின் முடிவும் அரசியலா? ரசிகர்களின் புதிய கொடி மற்றும் பிறந்தநாள் பேச்சால் பரபரப்பு!
Local
28 July 2026
டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகளுக்காக இந்தியா வழங்கும் மெலத்தியன்!
Local
28 July 2026
நடிகை மிருணாள் தாகூர் மற்றும் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடையே காதலா? வெளியான காணொளி
Local
28 July 2026