அஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் ஓடும் தொடருந்தில் தனியாகப் பயணம் செய்த நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றத்துககாக இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 22 வயதான சரணீஸ் சிவகுமார் என்பவருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி கிளீவ்லேண்ட் வழித்தட தொடருந்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சரணீஸ் சிவகுமார் மற்றும் அவரது நண்பரான பேட்லி மாவினே ஆகிய இருவரும் தொடருந்தில் தனியாகப் பயணித்த நபர் ஒருவருடன் ஏற்பட் வாய்த்தர்க்கம் கைக்கலப்பாக மாறியுள்ளது.
இதில் இருவரும் சேர்ந்து அந்த நபரின் முகத்திலும் தலையிலும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபர் தொடருந்தை விட்டு இறங்க முயன்றபோது, மூடப்பட்ட கதவுகள் வழியே அவரை இழுத்துத் தடுத்துள்ளனர்.
பின்னர் அந்த நபரின் பையைப் பறிக்க முயன்ற போது, சரணீஸ் சிவகுமார் கண்ணாடி பொருளொன்றினால் அவரது தலையில் பலமாகத் தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்து இரத்தம் சிந்திய அந்த நபர், இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்துக்குப் பிறகு குயின்ஸ்லேண்ட் மாகாணத்தை விட்டு வெளியேறியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கிளீவ்லேண்ட் நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற இந்த வழக்கில், சரணீஸ் சிவகுமார் தான் தற்காப்புக்காகவே இவ்வாறு நடந்துகொண்டதாகக் கூறினார்.
எனினும் அதனை நிராகரித்த நீதவான் டெபோரா வஸ்டா, "தற்காப்பு என்பது வேறு, ஒருவர் தலையில் தாக்குவது தற்காப்பாகாது. இது ஒரு அப்பாவி மனிதன் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்" எனக் கடுமையாக விமர்சித்தார்.
எனினும் அதனை நிராகரித்த நீதவான் டெபோரா வஸ்டா, "தற்காப்பு என்பது வேறு, ஒருவர் தலையில் தாக்குவது தற்காப்பாகாது. இது ஒரு அப்பாவி மனிதன் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்" எனக் கடுமையாக விமர்சித்தார்.
எனினும், இந்த வழக்கின் அதிகபட்ச தண்டனைக்காலம் 12 மாதங்கள் மட்டுமே என்பதால், சரணீஸுக்கு 8 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஏற்கனவே 89 நாட்கள் விளக்கமறியலில் இருந்தமையால், மீதி தண்டனைக் காலத்தைக் கண்காணிப்பின்கீழ் பிணையில் கழிப்பதற்கு நீதிமன்றம் அனுமதித்தது.
ஏற்கனவே 89 நாட்கள் விளக்கமறியலில் இருந்தமையால், மீதி தண்டனைக் காலத்தைக் கண்காணிப்பின்கீழ் பிணையில் கழிப்பதற்கு நீதிமன்றம் அனுமதித்தது.
சரணீஸ் சிவகுமார் சிறுவயதிலேயே அவுஸ்திரேலியாவுக்குச் சென்று குடியேறியவர் என்பதும், கடந்த ஆண்டு அவருக்கு அஸ்திரேலியக் குடியுரிமை கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மெல்போர்னில் இருந்து வேலை தேடி பிரிஸ்பேன் வந்த அவர், சம்பவத்தின் போது வீடற்றவராகவும் வேலையற்றவராகவும் இருந்துள்ளார்.
இந்த தாக்குதலில் தொடர்புடைய மற்றுமொரு குற்றவாளியான மாவினேவுக்கு ஏற்கனவே 10 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
அதிகரிக்கும் வெப்பநிலைக்கு மத்தியில், உடற்பயிற்சி குறைவதால் நீண்டகால ஆரோக்கியத்திற்கு ஆபத்து – ஆய்வாளர்கள் எச்சரிக்கை
Local
31 July 2026
பீர் உற்பத்திக்கு அரிசி, சீனியா? தடுக்கக்கோரும் மனுவின் மீது நீதிமன்றின் உத்தரவு
Local
31 July 2026
நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு
Local
31 July 2026
காஸா ஆயுதக் களைவு ஒப்பந்தம்: டொனால்ட் டிரம்பின் முக்கிய அறிவிப்பு
Local
31 July 2026
பாகிஸ்தானில், நிலக்கரி சுரங்க விபத்து: 11 பேர் பலி
Local
31 July 2026
கெஷ்ம் மரணங்களுக்கு அமெரிக்கா, விலை செலுத்திவேண்டியிருக்கும் என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரித்துள்ளார்!
Local
31 July 2026
போலந்து வான்வெளிக்குள் ரஷ்ய ஏவுகணை: விரைந்தது நேட்டோ
Local
31 July 2026
மூன்று முக்கிய கடல் வழிகளில் ஏற்பட்ட தடையால் உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு ஆபத்து
Local
31 July 2026
ஸ்பெயினின் தியூட்டா பகுதிக்குள் குடியேறுபவர்கள் பெருமளவு வருகை: மனிதநேய மற்றும் பாதுகாப்பு நெருக்கடி என தலைவர் எச்சரிக்கை!
Local
31 July 2026
இந்தியாவில் முன்பதிவில் புதிய சாதனை படைத்தது 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' – முதல் நாளிலேயே ₹45 கோடி வசூல்!
Local
31 July 2026