போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருட்களின் சந்தைப் பெறுமதி எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பது குறித்து ஜனாதிபதி காவல்துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
காலி மாவட்டத்திற்கான விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் "ரடம எகட" போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து காவல்துறை அதிகாரிகள், இந்தக் கூட்டத்தில் விளக்கமளித்தனர்.
இதன்போது, பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் பணமதிப்பு எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்று ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த காவல்துறையினர், பல்வேறு பகுதிகளில் நிலவும் போதைப்பொருளின் தற்போதைய சந்தை விலை அடிப்படையிலேயே மதிப்பீடுகள் கணக்கிடப்படுவதாக தெரிவித்தனர்.
உதாரணமாக, காலி பகுதியில் 70 முதல் 80 மில்லிகிராம் கொண்ட ஹெரோயின் பொதி ஒன்று சுமார் 2,000 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், கொழும்பு உட்பட்ட நாட்டின் பிற பகுதிகளில் இதன் விலைகள் மாறுபடுவதாகவும் காவல்துறை அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
காலி மாவட்டத்தில் இந்த வருடத்துக்குள் இதுவரை 2,607 போதைப்பொருள் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் சுமார் 119 கிலோகிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன், நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துகள் மற்றும் வாகனங்கள் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Latest News
குற்றங்களை கண்டறிந்த காவல் நாய்களுக்கு புதிய உரிமையாளராகும் வாய்ப்பு
Local
30 July 2026
நடிகர் கவின் வீட்டில் இரட்டை மகிழ்ச்சி : திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து!
Local
30 July 2026
ஒரு தந்தையாக என் கடமை... : மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்ட நெகிழ்ச்சி செய்தி!
Local
30 July 2026
ஹரக் கட்டா உள்ளிட்ட ஐவருக்கு எதிரான பயங்கரவாதத் தடுப்புச் சட்ட கீழான வழக்கை முன்னகர்த்த முடியாது – நீதிமன்றம் உத்தரவு
Local
30 July 2026
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் ஃப்ளெமிங் நியமனம்!
Local
30 July 2026
நீர்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு
Local
30 July 2026
நாசா செயற்கைக்கோள் படப்பிடிப்பில் சிக்கிய விசித்திரம் : விஞ்ஞானிகளின் அவசர எச்சரிக்கை!
Local
30 July 2026
நாட்டின் சில பகுதிகளில் நாளை 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு
Local
30 July 2026
தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க புதிய திட்டங்கள்
Local
30 July 2026
ஆகஸ்ட் 3 ஆம் திகதி தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
Local
30 July 2026