அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதல்களுக்கு மத்தியில் தனது வான் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்கில், சீனாவிடமிருந்து 400 தோள்பட்டையில் வைத்து இயக்கும் குறுந்தூர வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளைப் பெற ஈரான் ஒப்பந்தம் செய்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
சுமார் 60 முதல் 70 மில்லியன் டொலர் பெறுமதியான இந்த ஒப்பந்தத்தின் முதற்கட்ட ஏவுகணைகள் அடுத்த சில வாரங்களில் ஈரானைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா தயாரிப்பான QW-12 மற்றும் FN-16 ரக ஏவுகணைகள் இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஈரானுக்கு வழங்கப்படவுள்ளதுடன், ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட இடைத்தரகு நிறுவனம் மூலமாகவே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவை குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்கள், உலங்கு வானூர்திகள் மற்றும் ஆளில்லா வானூர்திகளை இலக்கு வைத்துத் தாக்கும் திறன் கொண்டவை என்பதுடன், எளிதில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்லக்கூடியவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த தகவல்களைச் சீன வெளியுறவு அமைச்சு முற்றுமுழுதாக மறுத்துள்ளதுடன், இந்த செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், அமைதியை ஏற்படுத்தவே சீனா தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த ஏவுகணைகள் சீனாவிலிருந்து பாகிஸ்தான் வழியே ஈரானுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளதாக வெளியாகிய செய்திகளைப் பாகிஸ்தான் இராணுவத்தின் ஊடகப் பிரிவான ISPR திட்டவட்டமாக மறுத்து, அவை பொய் பிரசாரம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் சேதமடைந்ததைத் தொடர்ந்து, தனது வான் பாதுகாப்பை விரைவாக மறுசீரமைக்க ஈரான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகப் பாதுகாப்பு பகுப்பாய்வாளர்கள் சுட்டிக்காட்டுவதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

Latest News
ஆகஸ்ட் 8 இல் 'Toxic' டிரெய்லர் வெளியீடு: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Local
01 August 2026
ரவி செனவிரத்னவுக்கும் ஷானி அபேசேகரவுக்கும் கூட மரண தண்டனை வழங்கப்பட முடியும் - உதய கம்மன்பில
Local
01 August 2026
செம்மணி புதைகுழி முதல் அகதிகள் பிரச்சினை வரை: முதலமைச்சர் விஜய்யிடம் வலியுறுத்திய கோரிக்கைகள்
Local
01 August 2026
இந்தியாவில் 2 நாட்களில் ரூ. 100 கோடியைக் கடந்தது 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே'
Local
01 August 2026
அந்த தேவை இருவருக்கு இருந்தது; புலனாய்வுத் தகவல் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றார் மைத்ரி - தீர்ப்பின் பின்னர் ஹேமசிறி கருத்து
Local
01 August 2026
ரஜினிகாந்த் கொடுத்த பரிசு : ‘ஹோம்வொர்க்’ செய்யும் நடிகை ராஷி கண்ணா!
Local
01 August 2026
உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு இலங்கையில் தாய்ப்பால் வாரம் பிரகடனம்!
Local
01 August 2026
தொடருந்து திணைக்களத்தின் குறைபாடுகள் : உரிய தீர்வு வழங்காவிட்டால் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானம்!
Local
01 August 2026
இலங்கைக்கு அப்பால் கப்பலிலிருந்து 17 வெற்று சரக்குக் கொள்கலன்கள் கடலில் வீழ்ந்துள்ளன!
Local
01 August 2026
நீர்கொழும்பு கடலில் காணாமல் போன கடற்றொழிலாளர் உடலமாக மீட்பு : மேலும் 3 படகுகள் தேடப்படுகின்றன!
Local
01 August 2026