2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை மதுவரித் திணைக்களம் 141.5 பில்லியன் ரூபாய் வரி வருவாயை ஈட்டியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2026ஆம் ஆண்டிற்காக அரசாங்கம் நிர்ணயித்துள்ள மொத்த 245 பில்லியன் ரூபாய் வருவாய் இலக்கில், முதல் ஆறு மாதங்களுக்கான இலக்கு 119.3 பில்லியன் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட இலக்குடன் ஒப்பிடுகையில் 118.6 சதவீத வருவாய் இலக்கை எட்டும் வகையில் திணைக்களம் வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பதிவான 117.03 பில்லியன் ரூபாய் வருவாயுடன் ஒப்பிடுகையில், 2026ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க வருவாய் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. ஹேமரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன், 2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மதுபான உற்பத்திக்காக 17.25 மில்லியன் லீற்றர் நிர்ப்பூரண மதுசாரம் (Absolute Alcohol) பயன்படுத்தப்பட்ட நிலையில், 2026ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் அது 19.6 மில்லியன் லீற்றராக அதிகரித்துள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மதுபானப் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் அரசாங்கம் அவ்வப்போது மதுபான விலைகளை அதிகரித்திருந்த போதிலும், பல்வேறு நிர்வாக மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலம் மதுவரி வருவாயை அதிகரிக்கவும் பாதுகாக்கவும் முடிந்துள்ளதாக மதுவரி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Latest News
ஸ்பெயின் - மொராக்கோ எல்லை நெருக்கடி: 50 ஆயிரம் ஏதிலிகள் மொராக்கோவுக்கு திரும்பினர்
Local
01 August 2026
உயர்தரப் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு
Local
01 August 2026
சர்ச்சைக்குரிய திட்டத்தை கைவிட்டது சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு!
Local
01 August 2026
அமெரிக்க கடற்படை போர் வானூர்தி விபத்து: வானூர்தி ஓட்டுநர் உயிர்தப்பினார்
Local
01 August 2026
களனி கங்கை ஆற்றுப் படுகையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறியளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை
Local
01 August 2026
ஈரான் தனது நிலைப்பாட்டை மாற்றும் வரை அமெரிக்கா மிகக் கடுமையான தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தும்: ட்ரம்ப் எச்சரிக்கை
Local
01 August 2026
கெனியோன் நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு: லக்சபான நீர்த்தேக்கப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
Local
01 August 2026
தென்மேல் பருவமழை தீவிரம்: 7 மாவட்டங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!
Local
01 August 2026
20 வருடங்களுக்கு பின்னர் இலங்கைக்கு தங்கம்: ருமேஷ் தரங்கவின் சாதனை
Local
01 August 2026
யாழ்ப்பாணம் முதல் பேருவளை வரை சிறிய ரக படகுகள் கடலுக்குச் செல்லத் தடை!
Local
01 August 2026