மொரோக்கோவிலிருந்து வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஸ்பெயினின் கட்டுப்பாட்டிலுள்ள செவுட்டா (ஊநரவய) பகுதிக்குள் சுமார் 60,000 ஏதிலிகள் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ளனர்.
இந்தநிலையில், இந்;;த சம்பவத்திற்கு மனிதக் கடத்தல் குழுக்களே காரணம் என ஸ்பெயின் பிரதமர் பெத்ரோ சான்செஸ் (Pநனசழ ளுánஉhநண) குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த திடீர் ஊடுருவலின் போது நேரிட்ட விபத்துகளில் குறைந்தது 57 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது "ஸ்பெயினின் பிராந்திய இறையாண்மையை மீறும் செயல்" என ஸ்பெயின் பிரதமர் பெத்ரோ சான்செஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் செவுட்டா அல்லது மெலிலா எல்லைக் கடற்பகுதியில் பிடிபடும் ஏதிலிகளை உடனடியாக மொரோக்கோவிற்குத் திருப்பி அனுப்பக் கூடாது என ஸ்பெயின் உயர்நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை மனிதக் கடத்தல் மாஃபியாக்கள் தவறாகச் சித்தரித்து இளைஞர்களைத் தூண்டிவிட்டுள்ளதாகப் ஸ்பெயின் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, நுழைந்தவர்களில் 48,000 க்கும் மேற்பட்ட ஏதிலிகள் தாமாக முன்வந்து மீண்டும் மொரோக்கோவிற்கே திரும்பியுள்ளதாக ஸ்பெயின் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சுமார் 83,600 மக்கள் வாழும் செவுட்டா நகருக்குள், அந்த மக்கள் தொகையில் 70 சதவீதத்திற்கு இணையான ஏதிலிகள் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கடலில் நீந்தியும், பாறை எல்லைகளைக் கடந்தும் நகருக்குள் நுழைந்தனர்.
வீதிகளிலும் சதுக்கங்களிலும் மக்கள் வெள்ளம் அலைமோதியதால் பாதுகாப்பு கருதி வணிக வளாகங்கள் மூடப்பட்டு, பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த ஸ்பெயின் அரசு தனது ஆயுதமேந்திய இராணுவப் படைகளை செவுட்டா மற்றும் மெலிலா எல்லைப் பகுதிகளில் களமிறக்கியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த சம்பவத்தை "ஒரு பேரழிவு" என்று வர்ணித்ததுடன், பலவீனமான சட்டமும் மோசமான நிர்வாகமுமே இதற்கு காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், எல்லைகளில் நடக்கும் இத்தகைய ஆபத்தான ஊடுருவல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆப்பிரிக்க கண்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரே நில எல்லையாகச் செவுட்டா மற்றும் மெலிலா பகுதிகள் திகழ்வது குறிப்பிடத்தக்கது.
Latest News
ஸ்பெயின் - மொராக்கோ எல்லை நெருக்கடி: 50 ஆயிரம் ஏதிலிகள் மொராக்கோவுக்கு திரும்பினர்
Local
01 August 2026
உயர்தரப் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு
Local
01 August 2026
சர்ச்சைக்குரிய திட்டத்தை கைவிட்டது சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு!
Local
01 August 2026
அமெரிக்க கடற்படை போர் வானூர்தி விபத்து: வானூர்தி ஓட்டுநர் உயிர்தப்பினார்
Local
01 August 2026
களனி கங்கை ஆற்றுப் படுகையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறியளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை
Local
01 August 2026
ஈரான் தனது நிலைப்பாட்டை மாற்றும் வரை அமெரிக்கா மிகக் கடுமையான தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தும்: ட்ரம்ப் எச்சரிக்கை
Local
01 August 2026
கெனியோன் நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு: லக்சபான நீர்த்தேக்கப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
Local
01 August 2026
தென்மேல் பருவமழை தீவிரம்: 7 மாவட்டங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!
Local
01 August 2026
20 வருடங்களுக்கு பின்னர் இலங்கைக்கு தங்கம்: ருமேஷ் தரங்கவின் சாதனை
Local
01 August 2026
யாழ்ப்பாணம் முதல் பேருவளை வரை சிறிய ரக படகுகள் கடலுக்குச் செல்லத் தடை!
Local
01 August 2026