கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் தீவிர வெப்ப வானிலை குறித்த எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திணைக்களத்தின் கணிப்பின்படி, மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவைக் குறிக்கும் வெப்பச் சுட்டெண் இந்தப் பகுதிகளில் 'கவனம் செலுத்தப்பட வேண்டிய மட்டத்திற்கு உயரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே நீண்ட நேரம் சூரிய ஒளியில் நேரடியாக வேலை செய்வதோ அல்லது வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதோ உடல் சோர்வை ஏற்படுத்தும்.
அத்துடன்; தொடர்ச்சியான கடினமான உழைப்பு தசைப்பிடிப்புகளுக்கு வழிவகுக்கும்.
இதன் காரணமாக, பொதுமக்கள் போதிய அளவு நீர் அருந்த வேண்டும்;
உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கத் தொடர்ந்து அதிகளவு நீரைக் குடிக்கவேண்டும்.
அதிக வெப்பம் நிலவும் வேளைகளில் கடினமான வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்ப்பதுடன், பணிபுரியும் இடங்களில் அவ்வப்போது நிழலான இடங்களில் ஓய்வெடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.
முதியவர்கள் மற்றும் நோயாளிகளின் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துமாறும், சிறுவர்களைப் பூட்டப்பட்ட வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Latest News
கென்யோன் நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு: லக்சபான நீர்த்தேக்கப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
Local
01 August 2026
தென்மேல் பருவமழை தீவிரம்: 7 மாவட்டங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!
Local
01 August 2026
20 வருடங்களுக்கு பின்னர் இலங்கைக்கு தங்கம்: ருமேஷ் தரங்கவின் சாதனை
Local
01 August 2026
யாழ்ப்பாணம் முதல் பேருவளை வரை சிறிய ரக படகுகள் கடலுக்குச் செல்லத் தடை!
Local
01 August 2026
ஜனாதிபதியை அவமதிக்கும் பேஸ்புக் பதிவு: காவல்துறை அதிகாரி கைது
Local
01 August 2026
நாட்டில் நிலவும் வறட்சி: நீரைக் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கோரிக்கை!
Local
01 August 2026
சஜித் நடத்தும் சிறுத்தைகள் தினம்
Local
01 August 2026
மிரிஸ்ஸ சந்தியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் தொடர்ந்தும் மருத்துவமனையில்!
Local
01 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவு: இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு பிரான்ஸ் தேசிய சட்டத்தரணிகள் சபை ஆதரவு!
Local
01 August 2026
வடக்கு ,கிழக்கு,உட்பட்ட பகுதிகளில் கடும் வெப்பம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு
Local
01 August 2026